போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-8


சென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து வந்தோம் . அதில் கடைசியாக Free Transform Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி பார்ப்போம்.மற்ற டூலை விட இதில் என்ன விசேஷம்என்கிறீர்களா?
மற்ற டூல்கள் உங்களுக்கு படத்தை ஒரளவுக்குதான் மற்றதில் பொருத்த முடியும். ஆனால் இதில் எந்த வகை படமானாலும் அதை நம் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.தனியாக ஒருபடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன் மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து விடலாம். இனி அதை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம். 
நீங்கள் ஒரு படத்தை தேர்வு செய்து அதில் மார்க்யு டூலால் செல்க்ட் செய்தபின் முறையே ப்ரி டிரான்ஸ் பார்ம் டூலால் தேர்வு செய்துவிட்டிர்கள் . அடுத்து அதில் உள்ள wrap டூலை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி 9 கட்டங்கள் வருவதை காண்பிர்கள். அந்த கட்டங்களின் மைய புள்ளிகளை இழுப்பதுமூலம் உருவங்கள் நமது விருப்பபடி மாறும். நான் இப்போது இரண்டு படங்களில் இந்த டூலை உபயோகிப்பதை பற்றி பார்க்கலாம். ஒரு டீ கப்பில் அழகான படத்தை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம். முதலில் நான் டீ கப் தேர்வு செய்து கொண்டேன்.
அது போல் இதில் வரகூடிய படமாக மகாபலிபுரம்

படத்தை தேர்வு செய்துகொண்டேன்.
இதை அப்படியே இந்த டீ-கப்பின் மீது பேஸ்ட் செய்து விடுங்கள். பின்னர் முன்னர் செய்தவாறு Free Transform Tool-Wrap தேர்வு செய்யுங்கள். 
உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இதில் உள்ள சதுரங்களின் முனையை பிடித்து மவுஸால் இழுக்க படம் நீங்கள் விரும்பியவாறு நகரும். உயரம்-அகலம்-நீளம் என நீங்கள் விரும்பியவாறு இதை மாற்றி இழுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய வடிவம் கிடைத்ததும் நீங்கள் இழுப்பதை விட்டுவிட்டு Enter தட்டுங்கள்.
உங்களுக்கு இந்த மாதிரி அழகான படம் கிடைக்கும்
நிறைய முறை முயற்சி செய்து பாருங்கள். பழக பழகதான் படம் மெருகேரும்.

Post a Comment

0 Comments