எக்ஸெல்: எந்த வரிசையில் சார்டிங்

நி யூமெரிக் மதிப்புகள், இலக்க மதிப்புகள், தேதி மற்றும்
நேரம் உட்பட, மைனஸ் மதிப்பு கொண்டவையிலிருந்து தொடங்கி பின்
பாசிடிவ் மதிப்பு குறைவானதிலிருந்து அதிகமானதற்குச்
செல்கிறது. எக்ஸெல் ஒரு செல்லின் பார்மட் பற்றி எல்லாம்
கவலைப்படாமல் அதன் இலக்க மதிப்பு அடிப்படையில் தான்
சார்டிங் செய்கிறது.

டெக்ஸ்ட்: ஆஸ்கி கேரக்டர்களை முதலில் சார்டிங் செய்கிறது.
*, (,), $ போன்றவை முதலில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன்பின் எழுத்துக்கள் அகரவரிசைப்படி (இவையும் ஆஸ்கி
கேரக்டர்களின் படி எடுத்துக் கொள்ளப்படும்) முதலில்
கேப்பிடல் எழுத்துக்களும் அதன் பின் சிறிய எழுத்துக்களும்
எடுத்துக் கொள்ளப்படும். இது போல ஆங்கில டெக்ஸ்ட்டில்
சிறிய, பெரிய எழுத்துக்கள் அடிப்படையில் உங்கள்
விருப்பத்திற்கேற்றபடி அமைத்துக் கொள்ள Data மெனு சென்று அங்கு பின்பு Options தேர்ந்தெடுத்து பின்னர் அதில் Case Sensitive என்பதில்´தேவையானதை டிக் செய்திட வேண்டும்.
இதே போல் ஏதேனும் ஒரு வேல்யூ அடிப்படையில் பிரித்து
அடுக்கிட கட்டளை கொடுத்தால் எக்ஸெல் முதலில்
எதிர்மறையானவற்றை (FALSE) தேர்ந்தெடுத்து பின்னர் சரியானதை
(TRUE)
எடுத்துக் கொள்ளும். சார்டிங்கில் கொடுக்கப்படும் டேட்டாவில் தவறானதாக (Errors) ஏதேனும் இருப்பின் சார்டிங் முடிந்த பின்னர் அவை இறுதியாகத் தரப்படும். காலியாக ஏதேனும் செல்கள் இருந்தால் எந்த வகையான சார்டிங் பணியிலும் அவை இறுதியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
ஆட்டோ சம் (AutoSum ) :தேர்ந்தெடுக்கப்படும் தகவல்களைத் தானாகக் கணக்கிட்டுச் சொல்லும் வசதி. இதனுடைய ஐகான் ஒரு சிக்மா ஆகும். இதனை கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் சம், ஆவரேஜ், கவுண்ட் நம்பர்ஸ், மேக்ஸிமம், மினிமம்
(Sum Average, Count Numbers, Minimum, Maximum)
மற்றும் சில செயல்பாடுகளுக்கான பிரிவுகள் இருக்கும். இவற்றில் தேவையானதைக் கிளிக் செய்திட முடிவுகள் தெரிய வரும். இந்த ஐகான் மெனு பாரில் கிடைக்கவில்லை என்றால் ஏதேனும் ஒரு டூல்பார் ஒன்றைக் கிளிக் செய்து
Commands
டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கேடகிரி
(Category)
என்னும் பிரிவில் AutoSum ஐகானைக் கிளிக் செய்து அப்படியே இழுத்துக் கொண்டு சென்று மெனுபாரில் விடவும்.
குறிப்பு: கணக்குகளை மேற்கொள்கையில் எக்ஸெல்
தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் உள்ள பார்மட்டிங் சமாச்சாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே எண்களை எடுத்துக் கொள்கிறது. ஒரு எண்ணின் 15 இலக்கங்கள் வரை கணக்கிட எடுத்துக் கொள்ளும்.

Post a Comment

0 Comments