பிட்ஸ் : எக்ஸெல்

எக்ஸெல் தொகுப்பில் செல் அகலம்

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எத்தனை முறை எக்ஸெல்
ஒர்க்ஷீட்டில் செல் ஒன்றின் அகலத்தை அடுத்தடுத்து பல
முறை மாற்றி அமைத்துள் ளீர்கள். அனைத்தும் ஒன்றாக
அல்லது ஏதேனும் ஒரு ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் எனத்
திட்டமிட்டு மாற்றி இருக்கிறீர்கள். இதற்கு எந்த எந்த
மெனுக்கள் எல்லாம் சென்றிருக்கிறீர்கள்.
Format menu, Column submenu, Width choice
எனப் பல முறை கிளிக் அடித்திருப்பீர்கள்.



இருப்பினும் நீங்கள் விரும்பியபடி செல் அகலம்
அமைந்ததா? ஏதேனும் ஒரு நேரத்தில் சரி இப்படியே
இருக்கட்டும் என விட்டுவிட்டீர்கள், இல்லையா? இதற்குப்
பதிலாக செல் ஒன்றின் அகலத்தை காபி செய்து அப்படியே
அடுத்த அடுத்த செல்களுக்கு அதனை காப்பி செய்திருக்கலாமே!
இதற்கு முதலில் செல் ஒன்றை செலக்ட் செய்திடுங்கள்.
இதில் நீங்கள் விரும்பும் அகலத்தில் உள்ள செல்லினைத்
தேர்ந்தெடுங்கள். இந்த செல்லை காப்பி பட்டன் அழுத்தி
அல்லது Ctrl + C, / Edit அழுத்தி
காப்பி செய்திடுங்கள். அல்லது
Edit
மெனு சென்று
Copy
என்பதை தேர்ந்தெடுத்தும்
செய்திடலாம். இனி புதிய அகலம் தேவைப்படும் செல் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கவும். பின்னர் எடிட் மெனு சென்று
Paste Special
என்ற ஆப்ஷனைத்
தேர்ந்தெடுக்கவும். Paste
Special
விண்டோவில் இந்த வேலைக்காகவே
Column Width
என்ற ஆப்ஷன்
கிடைக்கும். இதனை செலக்ட் செய்து ஓகே பட்டன் கிளிக்
செய்தால் இனி இந்த செல் அதே அகலத்தில் இருக்கும்.
டேட்டா எதுவும் காப்பி செய்திடாமல் செல்லின் அகலம்
காப்பி ஆகிவிட்டதே.


* எக்ஸெல்லில் கொடுக்கப்பட்டுள்ள பார்முலாவில் கமெண்ட்
அமைத்திட பார்முலா முடிவில் +அடையாளம் ஒன்றை
ஏற்படுத்தவும். அடுத்து N என்று டைப் செய்து பின்
அடைப்புக் குறிக்குள் தேவைப்படும் செய்தியை டைப்
செய்திடவும். எடுத்துக் காட்டாக பார்முலாவும் கமெண்ட்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது. =CurrentAssets
/ CurrentLiabilities+ N(“The formula returns Current
Ratio”)



* எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட் தயாரிக்கையில் ஏதேனும்
ஒரு ஆண்டினை அதன் தலைப்பாகத் தர விரும்புகிறீர்களா?
அப்படியானால் எக்ஸெல் இந்த எண்ணை எண்ணாகக் கருதாமல்
சொல்லாகக் கருத வேண்டும். இல்லையா? இதற்கான வழி இதோ:
எண்ணுக்கு முன்னால் அபாஸ்ட்ரபி என்னும் அடையாளத்தை
அமைக்கவும். எடுத்துக் காட்டாக ’2008 என அமைத்தால்
2008 எண்ணாகக் கருதப்பட மாட்டாது. ஒன்றை நினைவில்
கொள்ள வேண்டும். இந்த அடையாளம் செல்லில் தெரியாது.



* எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஹெடர் அல்லது புட்டரில்
பைலுக்கான பாத் இணைந்து அமைத்திடலாம். இதற்கு
File
மெனுவில்
Page Setup
தேர்ந்தெடுக்கவும்.
பின் Header/Footerஎன்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில்
Custom Footer
என்பதைத்
தேர்ந்தெடுக்கவும். பின் இடது பக்க பிரிவைத்
தேர்ந்தெடுக்கவும். இதில் ஐகானை செலக்ட் செய்திடவும்.
பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி பைலுடன்
அந்த பைல் உள்ள டைரக்டரி காட்டும் வரி இணைக்கப்படும்.



அனைத்தும் மாறும்: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில்
டேட்டாக்களை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில்
மாற்றங்கள் அல்லது புதிய டேட்டா அமைக்கையில் அனைத்து
ஷீட்களிலும் அல்லது குறிப்பிட்ட ஷீட்களில் அவை அப்படியே
அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். எடுத்துக்
காட்டாக பலவகையான தகவல்கள் இருந்தாலும் டிஸ்கவுண்ட்
சதவிகிதம் ஒன்றினை ஒரு குறிப்பிட்ட எண் செல்லில்
போட்டிருக்கலாம். இது அனைத்து ஒர்க் ஷீட்களிலும்
இருக்க வேண்டும் என விரும்பினால் ஒவ்வொரு ஷீட்டாகத்
தேடித்தேடி டைப் செய்திட வேண்டாம். ஒரு ஷீட்டில்
செய்தாலே மற்றவற்றிலும் அது அமைக்கப்படும்.


இதற்கான வழி: எந்த ஷீட்டில் தகவலை
அமைக்கப்போகிறீர்களோ அதனைத் திறந்து கர்சரை அங்கு
நிறுத்துங்கள். பின் ஷிப்டை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு
ஷீட்டாகத் தேர்ந்தெடுக்கவும்.


* மாற வேண்டிய ஷீட்கள் அடுத்தடுத்து இல்லாமல் இருந்தால்
கண்ட்ரோல் அழுத்தி ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும். இனி
டேட்டா டைப் செய்திடவும். தேவையான செல்களில் டேட்டா
அமைத்தபின் மவுஸைக் கிளிக் செய்திடவும். நீங்கள்
முதலில் ஷீட்களைத் தேர்ந்தெடுக்கையில் கீழாக உள்ள
பட்டன்கள் ஹைலைட் ஆகியிருக்கும். இப்போது டேட்டா
அமைத்து கிளிக் செய்தவுடன் ஹைலைட் மறைந்திருக்கும்.
அந்த ஷீட்களில் சென்று பார்த்தால் புதியதாக
அமைக்கப்பட்ட தகவல்கள் அங்கும் அதே செல்களில் பதிவாகி
இருப்பதைப் பார்க்கலாம். அந்த செல்களை இணைத்து மற்ற
செல்களில் ஏதேனும் பார்முலாக்கள் அமைத்திருந்தால்
டேட்டாவுக்கேற்றபடி பார்முலாக்கள்
இயக்கப்பட்டிருப்பதனையும் காணலாம்.
A . தொடங்கியாச்சு தொந்தரவு

இணையத்திற்கான பிரவுசர் என்றாலே அதில் எழுபத்தேழு
ஓட்டைகள் இருக்கும்; அதன் வழியே வைரஸ் கர்த்தாக்கள்
எளிதாக வைரஸ்களை அனுப்ப முடியும் என்பது இன்றைய
விதியாக மாறிவிட்ட நிலையில், புதிதாய் முளைத்த கூகுள்
நிறுவன பிரவுசர் குரோம் தப்ப முடியுமா?

தன் பிரவுசர் குரோம் வந்த பின் மூன்று நாட்கள்
அமைதியாய் இருந்த கூகுள் நான்காம் நாள் அதன் பிரவுசரில்
இரண்டு இடங்களில் மிகவும் மோசமான இடம் இருந்ததாகவும்
அதனைச் சரி செய்தாயிற்று எனவும் அறிவித்தது. இந்த
பிரச்சினை பபர் ஓவர் ரன் சம்பந்தப் பட்டதாகும். இதனால்
பிரவுசரின் புரோகிராமினை மற்றவர்கள் நுழைய
வாய்ப்பிருந்தது.




இதனை கூகுள் தற்போது சரி செய்துள்ளது. இத்துடன்
இன்னும் இரண்டு பிரச்னைகளையும் சத்தம் போடாமல் சரி
செய்துள்ளது கூகுள். முதல் பிரச்சினையில் யாராவது
பிரவுசரின் அட்ரஸ் பாரில்
“about:%”
என டைப் செய்தால்
கம்ப்யூட்டரே கிராஷ் ஆகுமாம். ஏதேனும் ஒரு வெப்
பக்கத்தில் இந்த டெக்ஸ்ட் ஹைப்பர் லிங்க்காக இருந்து
அதில் பிரவுஸ் செய்பவர் அதன் மீது தன் மவுஸினைக் கொண்டு
சென்றால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும் வாய்ப்பு இருந்தது.
அடுத்தது டெஸ்க்டாப்பினை டவுண்லோட் செய்திடும்
புரோகிராம்களின் இருப்பிடமாக அமைக்காதது. மற்ற
பிரச்சினைகள் எல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள் தான்.

Post a Comment

0 Comments