Resolution என்றால் என்ன?

மகேஷ் ஒரு டிஜிட்டல் கேமராவிலிருந்து படம் எடுக்கிறார்கள். கணினி திரையில் சிறிய அளவில் தெளிவாகத் தெரியும். அதனைப் பிறகு 8 x 108 அங்குள அளவில் பெரிதாகப் ப்ரிண்ட் செய்து பார்க்கும் போது அந்த போட்டோ தெளிவற்றுக் காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

கேமராவில் எடுக்கும் புகைப்படங்களாயிருக்கட்டும், கணினித் திரையில் தோன்றும் காட்சிகளாயிருக்கட்டும் இவற்றின் தெளிவுத் திறனில் பிக்ஸல்களே Pixeis பங்கு வகிக்கின்றன. திரையில் படங்களும் எழுத்துக்களும் பிக்ஸல் எனப்படும் புள்ளிகளின் சேர்க்கையினாலேயே உருவாக்கப்படுகின்றன.

Pixel எனும் சொல் Picture Elements எனும் இரு வார்த்தைகளிலிருந்தே உருவாகியது. பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயுசன் Resolution எனப்படுகிறது. கிடையாகவும் நிலைக்குத்தாகவும் உள்ள பிக்ஸல்களின் பெருக்கமாக 640 கீ 480 இது எடுத்துரைக்கப்படும்.

ஒரு படத்தை உருவாக்கும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயிருப்பின் அந்த படம் திரையிலும் அச்சு வடிவிலும் தெளிவாகத் தோன்றும். அதிக எண்ணிக்கையிலான பிக்ஸல் கொண்டு ஒரு படம் உருவாக்கப்படுமாயின் அது உயர் ரெஸலுயூஸன் (High Resolution) கொண்ட படமாகக் கருதப்படும்.

படத்தின் தெளிவுத் திறனைக் குறிப்பதற்கே ரெஸலுயூசன் எனும் வார்த்தை பயன்படுகிறது. மொனிட்டர், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர் என்பன பல தரப்பட்ட ரெசலுயூசன்களுடன் சந்தையில் கிடைக்கின்றன.

மொனிட்டரானது எழுத்துக்களையும் படங்களையும் படத்தில் காட்டியுள்ளபடி மெட்ரிக்ஸ் எனப்படும் நிரல்களும் நிரைகளும் கொண்ட ஒரு அணியில் புள்ளிகளைக் கொண்டே உருவாக்குகின்றன. இது பிட்மெப் காட்சி எனவும் அழைக்கப்படும். இங்கு ஒவ்வொரு சதுரத்தினாலும் காட்டப்படும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு பிக்சல் எனப்படுகிறது. படத்தில் நிழலிடப்பட்ட பகுதி ஒரு பிக்சலைக் குறிக்கிறது.

கணினித்திரை இந்த அணியினுள்ளே பிக்ஸல்களின் வெவ்வேறு ஒழுங்குகளைப் பயன்படுத்தி எழுத்துக்களையும் படங்களையும் உருவாக்குகிறது. கறுப்பு வெள்ளையிலான ஒரு படத்தை மொனிட்டர் திரையில் உருவாக்குதவற்கு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பிட் (0 அல்லது 1) பயன்படுத்தப்படுகிறது. இங்கு வெள்ளை நிற பிக்ஸலை பூச்சியமும் (0) கறுப்பு நிற பிக்ஸலை ஒன்றும் (01) குறிக்கிறது.

வேறு வர்ணங்களைச் சேர்க்கும் போது ஒரு பிக்ஸலைக் குறிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பிட் அவசியப்படுகிறது. இது ஒரு படத்தின் பிட் டெப்த் (கிit னீலீpth) எனப்படும். அதிக பிக்ஸல்களைத் தோற்றுவிக்கும்போது ரெஸலுயூசன் உயர் நிலையில் காணப்படும்.

உதாரணமாக ஒரு 8 பிட் அளவிளான பிட் டெப்த் கொண்ட மொனிட்டரில் ஒவ்வொரு பிக்ஸலும் 8 பிட் அளவு கொண்ட வர்ணங்களை உருவாக்கும். அதாவது இரண்டின் எட்டாம் அடுக்கு 28 அல்லது 256 வர்ணங்களை உருவாக்க முடியும். அதேபோல் 24 பிட் மொனிட்டர் மூலம் 16 மில்லியனுக்கு மேற்பட்ட வர்ண வேறுபாடுகளை உருவாக்கலாம்.

பிக்ஸல் என்பது ஒரு படத்தில் மிகவும் சிறிய பகுதியாகவிருப்பதோடு ஒவ்வொரு பிக்ஸலும் மேலும் சிறிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். சாதாரண ஒரு RGB மொனிட்டரில் ஒவ்வொரு பிக்ஸலும் சிவப்பு (RED), பச்சை (Green), நீலம் கிluலீ நிறத்திலான மூன்று புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

புதிதாக ஒரு மொனிட்டரை வாங்கும்போது அதன் ரெஸலுயூசனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ரெஸலுயூசன் அடிப்படையிலும் மொனிட்டர்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.

அளவில் பெரிய மொனிட்டர்களில் தெளிவான படத்தைத் தோற்றுவிக்க அவை உயர் ரெஸலுயூசன் கொண்டதாயிருக்க வேண்டும்.

ஒரே அளவு ரெஸலுயுஸன் கொண்ட ஒரு படம் சிறிய மொனிட்டர்களில் தெளிவாகவும், பெரிய மொன்னிட்டர்களில் தெளிவற்றதாகவும் தோன்றும். திரையினளவு அதிகரிக்கும்போது அதே எண்ணிக்கையான பிக்ஸல்கள் மேலும் பல அங்குலங்களுக்குப் பரந்து விரியும்போது பிக்ஸல்களுக்கிடையே இடைவெளி அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

மொனிட்டர் வகைகள் v VGA (Video Graphics Array): இவ்வகை மொனிட்டர்களின் ரெஸலுயூசன் 640 x 480 பிக்ஸல் கொண்டதாயிருக்கும். அவதாவது கிடையாக 640 பிக்ஸல்களும் நிலைக்குத்தாக 480 பிக்ஸல்களுடன் மொத்தமாக 307200 பிக்சல்களையும் கொண்டிருக்கும்.

v SVGA (Super Video Graphics Array): இவ்வகை மொனிட்டர்களின் ரெஸலுயூசன் 800 கீ 600 பிக்ஸல் கொண்டதாயிருக்கும். இந்த 15 அங்குல மொனிடர்களில் இந்த தரப்படுத்தலே பயன்படுகிறது. v XGA (Extended Graphics Array): 1,024 X 768 Pixels ரையான ரெஸலுயூசனைக் கொண்டிருக்கும்.

இது 17 முதல் 19 அங்குல மொனிட்டர்களுக்குப் பொருந்தும். v SXGA (Super Extended Graphics Array): 1,280 X 1,024 Pixels வரையிலான ரெஸலுயூசனைக் கொண்டிருக்கும், 19-21 அங்குல மொனிட்டர்களுக்குப் பொருந்தும். v UXGA (Ultra Extended Graphics Array): 1,600 X 1,200 Pixels வரையிலான ரெஸலுயூசனைக் கொண்டிருக்கும், 21 அங்குல மொனிட்டர்களுக்குப் பொருந்தும்.

மொனிட்டரில் போன்றே டிஜிட்டல் கேமராவிலும் பிக்ஸல் கொண்டே படங்கள் உருவாக்கப்படுகின்றன. குறைந்தளவு ரெஸலுயூசன் கொண்ட கேமராவால் பிடிக்கப்பட்ட படத்தைப் பெரிதாக்கி ப்ரிண்ட் செய்யும்போது அது தெளிவற்றதாகவே தோன்றும். இப்போது முதற் பந்தியை மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்.

மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும். கேமராவால் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும். அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மானிக்கும் காரணியாகவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும் போதும் பிக்ஸல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்வதாயின் குறைந்த ரெஸலுயூசனுடனும், பெரிய அளவில் அச்சிட்டுக் கொள்ள வேண்டுமாயின் உயிர் ரெஸலுயூஸனுடனும் டிஜிடல் கேமரா கொண்டு படங்களைப் பிடிக்க வேண்டும்.

டிஜிட்டல் கேமராவால் பிடிக்கப்படும் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் பிக்ஸலும் ரெஸலுயூசனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படத்தை உருவாக்க கேமரா எடுத்துக் கொள்ளும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயின், படத்தின் தரமும் உயிர்ந்ததாயிருக்கும். எனினும் பிக்ஸல்களின் எண்ணிக்கை மட்டுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.

டிஜிட்டல் கேமரா விளம்பரங்களில் மெகாபிக்ஸல் (ணிலீgapixலீl) எனும் வார்த்தை உபயோகிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு மெகா பிக்ஸல் என்பது ஒரு மில்லியன் பிக்ஸல்களுக்குச் சமமானது. மெகா பிக்ஸலின் அளவு அதிகமாக இருக்குமிடத்து படத்தின் தெளிவு அதிகமாக இருப்பதுடன், கேமராவின் விலையும் கூட சற்று அதிகமாகவே இருக்கும். தற்போது பல்வேறு மெகாபிக்ஸல் அளவுகளில் டிஜிட்டல் கேமராக்கள் கிடைக்கின்றன. பெரிய அளவில் படங்களைப் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டுமானால் குறைந்தது 2 மெகா பிக்ஸல் கொண்ட கெமராவைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண பிலிம் கெமரா தரத்தில் படம் பிடிக்க வேண்டுமாயின் மூன்றிற்கு மேற்பட்ட மெகா பிக்ஸல் கொண்ட கெமராவைப் பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் கெமரா மற்றும் ப்ரிண்டர்களின் தெளிவுத் திறனை dots per inch (dpi) எனும் அலகிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு dpi என்பது ஒரு சதுர அங்குலத்தில் உருவாக்கக் கூடிய பிக்ஸல்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 640 x 480 dpi அளவு கொண்ட ஒரு கெமரா ஒரு சதுர அங்குளத்தில் கிடையாக 640 பிக்ஸல்களையும் நிலைக்குத்தாக 480 பிக்ஸல்களையும் தோற்றுவிக்கும். மொத்தமாக ஒரு சதுர அங்குலத்தில் 307,200 பிக்ஸல்களைத் தோற்றுவிக்கும்.

தற்போது பாவனையிலுள்ள கெமராக்களில் ரெஸலுயூசன் அளவை மாற்றி அமைக்கும் வசதியுமுள்ளது. குறைந்த ரெசலுயூசனில் அதிக எண்ணிக்கையில் படங்களைப் பிடித்து கெமராவிலுள்ள மெமரி கார்டில் சேமிக்கலாம். மாறாக அதிக ரெஸலுயூசன் கொண்ட படங்கள் மெமரி கார்டில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.

ஒவ்வொரு பிக்ஸலையும் உருவாக்க எடுத்துக் கொள்ளும் (bit) பிட்டுகளின் எண்ணிக்கையும் கெமராவின் திறனை வெளிப்படுத்தும் கறுப்பு வெள்ளைப் படங்களைவிட பல வர்ணங்களில் பிடிக்கப்படும் படங்கள் ஒரு பிக்ஸலை உருவாக்க எடுத்துக் கொள்ளும் பிட்டுகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். உயர் தரத்திலான படங்களைப் பிடிக்கும் கெமராக்கள் குறைந்தது 24 பிட் கொண்டதாயிருத்தல் வேண்டும்.

உயர் தரத்தில் படங்களை அச்சிட்டுக் கொள்ள ஒரு அங்குளத்தில் குறைந்தது 200 பிக்ஸல்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதாவது 5 x 7 அங்குல அளவில் ஒரு படத்தைப் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டுமாயின் 1000 x 1400பிக்ஸல்களும் 8 x 10 அங்குல அளவில் அச்சிட்டுக் கொள்ள 1600 x 2000 பிக்ஸல்களும் கொண்டிருத்தல் வேண்டும்.

வெவ்வேறு அளவிலான ரெசலுயூசன், மொனிட்டர் திரையில் படங்களை வெவ்வேறு அளவுகளில் காண்பிக்கும். விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் ரெஸலுயூசனை மாற்றப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

Display Properties டயலொக் பொக்ஸைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Settings செட்டிங்ஸ் டேபில் க்ளிக் செய்யுங்கள். Screen Resolution பகுதியில் நகர்த்தக் கூடிய ஒரு அம்புக் குறியைக் காணலாம். அதனை மவுஸ் மூலம் இடப்பக்கமாக நகர்த்தி (Less) குறைந்த ரெஸலுயூசன் (800 x 600) அளவில் வைத்து Apply பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது திரையில் படத்தின் அளவை அவதானியுங்கள்.

அதே போல் அம்புக் குறியை வலப்புறம் நகர்த்தி (More) அதிக ரெசலுயூசனில் வைத்து(Apply) க்ளிக் செய்யுங்கள். இப்போது படத்தின் அளவு சிறிதாயிருப்பதைக் காணலாம்.

விண்டோஸில் ரெஸலுயூசனை விருப்பம் போல் மாற்றியமைக்கும் வசதியிருப்பதால் உங்கள் தேவைக்கேற்ற ரெஸலுயூசன் அளவு என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ரெஸலுயூசனின் அளவைக் குறைக்கும் போது மொனிட்டர் திரையில் படங்கள் பெரிதாகத் தோன்றும்.

அப்போது இணைய பக்கங்கள் மற்றும் வேறு ஆவணங்கள் கணனித் திரையின் அளவுக்கேற்ப தோன்றாது. ஒரு பக்கத்தை முழுமையாகப் பார்வையிட மேலும் கீழும் இடமும் வலமும் ஸ்க்ரோல் செய்ய வேண்டி வரலாம். அதே போல் ரெசலுயூசன் அளவை அதிகரிப்பதன் மூலம் படங்களின் அளவு சிறிதாகத் தோன்றுவதுடன் தெளிவும் அதிகரிக்கும்.

ரெஸலுயூசன் மற்றும் பிக்சல் பற்றித் தெளிவாக அறிந்திருத்தல் உங்கள் கணனிக்கேற்ற ஒரு வன்பொருள் சாதனத்தை அதாவது, வீடியோ கர்ட், மொனிட்டர், வெப்கேம், ஸ்கேனர், டிஜிட்டல் கெமரா போன்றவற்றைத் தெரிவு செய்திடவும் உதவியாக இருக்கும்.

Post a Comment

0 Comments