v

Untitled-1விண்டோஸ் எக்ஸ்பியின் தீவிர ரசிகர்களை இணைத்தால் ஒரு நாடே உருவாக்கலாம். அந்த அளவிற்கு எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றே போதும் என இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். அதனாலேயே விண்டோஸ் விஸ்டா, எக்ஸ்பி பிரபலமான அளவிற்கு உயரவில்லை.இப்போது விண்டோஸ் 7 வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் அண்மையில் விண்டோஸ் எக்ஸ்பி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி உள்ளது.விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் எக்ஸ்பி மோட் வசதி தரப்படும். இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கி விண்டோஸ் 7ல் இயங்க மறுக்கும் புரோகிராம் ஒன்றினை விண்டோஸ் எக்ஸ்பி மோட் பெற்று இயக்க முடியும். இதன் மூலம் மக்களை விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு வரச்சொல்கிறது மைக்ரோசாப்ட்.

ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தியையும் தந்துள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ்பி மோட் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்காது. புரபஷனல் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகமானோர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோம் எடிஷன்களில் இது இருக்காது. மைக்ரோசாப்ட் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பதிப்புகளிலும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்

Post a Comment

0 Comments