டெஸ்க் டாப்பை விட லேப்டாப் மோசமானது! ஆய்வுக்குழு அறிக்கை

நியூயார்க்: கணினி மற்றும் மடிக் கணினி போன்றவற்றை பயன்படுத்துவது மற்றும் இதைத் தொடர்ந்து ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிறப்புக்குழு ஆய்வு மேற்கொண்டது. 
 
இதுபற்றி ஆய்வுக்குழுவினர் அறிக்கையில், "மணிக்கட்டுக்கு அதிக வேலை கொடுக்கும்போது ‘கார்பல் டன்னல் சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பு ஏற்படுகிறது. டைப் அடிக்கும் காலத்தில் இருந்தே இது இருக்கிறது. கணினி பயன்பாடு போல இதன் பாதிப்பும் அதிகரித்துள்ளது. கணினியில் உட்காரும்போது இடுப்பு, முதுகு, கழுத்து ஆகியவை நேர் செங்குத்தாக இருக்க வேண்டும்.

நம்மை அறியாமல் பல மணி நேரம் கூன் போட்டு உட்கார்ந்தால் முதுகு வலி, வந்துவிடும். கழுத்தை வளைத்து கணினி திரையைப் பார்த்தால் கழுத்து வலி வரும்.  கணினி பணியின்போது இடையிடையே சிறிய ஓய்வு அளிப்பது கண்ணுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி தரும். கணினியை விட மடிக்கணினியால் கழுத்து, முதுகு வலி அதிகம் ஏற்படும். மடிக்ணினியில் திரையும் விசைப்பலகையும் அருகருகே உள்ளது. கை மற்றும் கழுத்தை இடைஞ்சலான வகையில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது.

அதிக நேரம் இணையதளம் பார்த்தால் இந்த பாதிப்பு மேலும் அதிகமாகும். யுஎஸ்பி இணைத்து மடிக்கணினியைச் சற்று தொலைவில் வைத்து வேலை செய்யலாம். வெளியே மடிக்கணினியை எடுத்துச் செல்பவர்கள் தேவையற்ற சுமைகளை குறைத்துக் கொள்வது நல்லது" என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments