விண்டோஸ் 7 பூட் மெனுவில் தேவையற்ற OS என்ட்ரிகளை நீக்க

இப்பொழுது பலரும் தங்களது கணினிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிக் கொள்கிறார்கள். உதாரணமாக ஒரே கணினியில் விண்டோஸ் 7 மற்றும் உபுண்டு போன்ற இயங்குதளங்களை dual boot வகையில் நிறுவிக் கொள்கிறார்கள். அதில் பலர் அந்த இரண்டு இயங்குதளங்களிலும் பணிபுரிந்தாலும் ஒரு சிலர், சில நாட்களுக்குப் பிறகு போரடித்து உபுண்டு தான் இப்பொழுது அதிகம் பயன் படுத்துவதில்லையே, அதை கணினியிலிருந்து நீக்கி விட்டால் என்ன? என்ற உந்துதலில், உபுண்டுவை நீக்கி விடுகிறார்கள்.

எல்லாம் சரிதான். ஆனால் உபுண்டு இயங்குதளம் நீக்கப்பட்டாலும் விண்டோஸ் 7 பூட் மெனுவில் ubuntu வும் பட்டியலிடப்பட்டிருக்கும். 


இந்த பூட் மெனுவிலிருந்து  ubuntu வை நீக்குவதற்கு சில மென்பொருள் கருவிகள் இருந்தாலும், இதனை விண்டோஸ் 7 -ல் உள்ளிணைந்த  bcdedit  என்ற கட்டளை கருவி கொண்டு எப்படி நீக்குவது என்று பார்க்கலாம். 

விண்டோஸ் 7 -ல் All Programs > Accessories பகுதிக்கு சென்று command prompt ஐ வலது க்ளிக் செய்து Run as Administrator -ல் க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது திறக்கும் Command prompt -ல் bcdedit என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது உங்கள் விண்டோஸ் 7 பூட் மெனுவில் உள்ள விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும். 

   
இதில் எந்த என்ட்ரியை நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, இதில் இறுதியாக உள்ள Ubuntu (பார்க்க description  Ubuntu) ஐ நீக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். (முக்கிய குறிப்பு:- உபுண்டு மிக மிக பயனுள்ள ஒரு சுதந்திர இலவச இயங்கு தளமாகும். இதை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு சில வாசகர்களின் சந்தேகத்தை போக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். விண்டோஸ் விஸ்டா / 7 அனைத்தையும் விட்டு விட்டு உபுண்டு பயன்படுத்த துவங்குங்கள் என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனை


இங்கு identifier என்பதற்கு நேராக உள்ள குறியீட்டை கவனியுங்கள். இதை நினைவில் வைப்பதோ அல்லது எழுதி வைப்பதோ சற்று சிரமம் என்பதால், ஒரு எளிய வழியை பார்க்கலாம். command prompt மெளஸ் கர்சரை எங்காவது வைத்து வலது க்ளிக் செய்து context மெனுவில் Mark என்பதை க்ளிக் செய்யுங்கள். 

  
இப்பொழுது மெளசின் இடது பட்டனை க்ளிக் செய்தபடி, identifier க்கு நேராக உள்ள குறியீட்டை முழுவதுமாக ட்ராக் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 

   
தேர்வு செய்த பின்னர் என்டர் கீயை தட்டுங்கள். இப்பொழுது நீங்கள் மார்க் செய்த குறியீடு கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்டிருக்கும். இனி command prompt -இல்
bcdedit  /delete 
என்று டைப் செய்யுங்கள் /delete அடுத்து ஒரு space இருக்கட்டும் (இப்பொழுது என்டர் தட்ட வேண்டாம்). Command prompt இல் எங்காவது வலது க்ளிக் செய்து context menu வில் Paste கொடுத்து என்டர் கொடுங்கள்.  (பேஸ்ட் கொடுத்தவுடன் முன்னர் கிளிப் போர்டில் நாம் காப்பி செய்து வைத்த குறியீடு  /delete இற்கு அடுத்து வரும்)


இப்பொழுது அந்த உபுண்டுவின் எண்டரி விண்டோஸ் 7 பூட் மெனுவிலிருந்து நீக்கப் பட்டிருக்கும். மறுபடியும் bcdedit கட்டளையை கொடுத்து பார்த்தால், உபுண்டு நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இனி உங்கள் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து பார்த்தால் பூட் மெனு வராது, உங்கள் நேரம் மிச்சப் படுத்தப்படும்.

Post a Comment

0 Comments