உங்கள் கணினி விண்டோஸ் 7 – XP Modeக்கு அனுசரணை வழங்குமா ?

போன பதிவில் விண்டோஸ் 7 விண்டோஸ் XP யை virtual முறையில் இயங்க வைக்கும் என்று கூறியிருந்தோம்.
Windows XP mode in Windows 7
ஆனால் இந்த வசதியை பயன்படுத்த உங்கள் கணினியின் வன்பொருள் உங்களுக்கு அனுசரணை (Support) வழங்குமா என்று எவ்வாறு பரிசோதிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


விண்டோஸ் XP mode உங்கள் விண்டோஸ் 7ல் இயக்க கீழே குறிப்பிட்டுள்ள கணினி வன்பொருள் தேவைப்படும்.
  • 2 GB RAM memory recommended
  • 15 GB free hard disk space for XP mode
  • 1 GHz 32-bit / 64-bit processor
  • CPU should support hardware virtualization
மேலே குறிப்பிட்டுள்ள தேவைகளில் முதல் மூன்றும் (Hardware) வன்பொருள் தேவைகள் அதனால் உங்கள் கணினி பழைய கணினி அல்லது தேவைக்கு குறைவாக இருந்த்தால் நீங்கள் வன்பொருளை மாற்ற வேண்டும். கடைசியாக குறிப்பிட்டுள்ள (hardware virtualization) இதை தெரிந்து கொள்ள உங்கள் mother boardல் உள்ள Processor Intel அல்லது AMD வகை சார்ந்த வகையாக இருக்க வேண்டும்.
Intel Porcessor என்றால் Intel Processor Identification Utility என்ற நிரலை தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
AMD Processor என்றால் AMD Hyper-V Compatibility Check tool என்ற நிரலை தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
CPU Technologies என்ற tabல் கிழே உள்ள படத்தை போல காண்பிக்கும். எனது கணினி virtualization technologyக்கு அனுசரணை வழங்கவில்லை அதனால் (NO) என்று காண்பித்துள்ளது.
intel processor identification

Post a Comment

0 Comments