எக்ஸெல்: சில குறிப்புகள்

எக்ஸெல் எழுத்தின் அளவு என்ன?
மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.
எக்ஸெல் – ஆல்ட்+ஷிப்ட்
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT
புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT
அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT
நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6+ALT+SHIFT
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT
திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT
ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT
மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT
பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
கண்ட்ரோல் + சி கொஞ்சம் ஜாக்கிரதை
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயல்பாடு கண்ட்ரோல்+சி ஆகும். தகவல், டெக்ஸ்ட்,படம் என எதுவானாலும் அதனைக் காப்பி செய்து இன்னொரு இடத்தில் பேஸ்ட் செய்திட நாம் கண்ட்ரோல்+சி தான் பயன்படுத்துகிறோம். இவ்வாறு செயல்படுகையில் காப்பி செய்யப்படும் விஷயம் தற்காலிகமாக கிளிப் போர்டுக்குச் செல்கிறது. இங்கு தான் பிரச்னையே உருவாகிறது. நம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் இந்த கிளிப்போர்டினை யாரும் எளிய வழிமுறை யில் அணுகலாம். அதனை அப்படியே அவர்களும் காப்பி செய்து கொள்ளலாம். எனவே இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் பாஸ்வேர்ட், பேங்க் அக்க வுண்ட் எண், அதற்கான தனிக் குறியிடுகள் போன்றவற்றைப் பயன்படுத்து வதற்காக கிளிப் போர்டில் காப்பி செய்து வைக்காதீர்கள். அவை மற்றவர்களால் அறிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. இதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்றால் எந்த ஒரு டெக்ஸ்ட்டையாவது கண்ட்ரோல் + சி கொடுத்து காப்பி செய்திடவும். அதன்பின் http://www.sourcecodesworld.com/special/clipboard.asp
என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் காப்பி செய்த டெக்ஸ்ட் இந்த தளத்தால் அணுகி எடுத்துக் கொண்டதை நீங்கள் காணலாம். கிளிப் போர்டில் காப்பி செய்ததை ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஏ.எஸ்.பி. கொண்டு பெற முடியும் என்ற வழியில் இது நடக்கிறது. எனவே கவனமாக இருக்கவும்.

Post a Comment

0 Comments