வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்

வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம்.
விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின் சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில் நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போன் செய்யலாம்.
Call Phone என்பது இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம் மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளது.

Post a Comment

0 Comments