போட்டோஷாப்-26 வெப்‍‍கேலரி உருவாக்குவது எப்படி?

இன்றைய மல்டிமீடியா உலகில் புகைப்பட எடிட்டிங்கில் அனைவராலும் உபயோகிக்கபடுவது அடோபியின் போட்டோஷாப் ஆகும். இந்த மென்பொருளிலேயே பிளாஷ் கேலரியை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஒரு புதிய போல்டரை உருவாக்கி அதில் சேமித்துக்கொள்ளவும் உதாரணமாக « My documents « பின்னர் அதே “My documents » ல் புதிய போல்டர் ஒன்றை உருவாக்கி அதற்கு உங்களுக்கு தகுந்த பெயரை கொடுக்கவும் சான்றாக Webgallery.

முதலில் நாம் பின்னனி இசையை உருவாக்கவேண்டும் திரைப்பட பாடல்களையோ அல்லது Instrumental இசையையோ பயன்படுத்தலாம். இதில் ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும் அதாவது உங்களிடம் இருக்கும் இசையில் ஒரு கிளிப்பை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும் எனவே ஒரே பாடலையே திரும்ப திரும்ப உபயோகிக்க விரும்பினால் ஒரு பாடலை மட்டுமே பயன்படுதிக்கொள்ளலாம் , நிறைய புகைபடங்களை பயன்படுத்தி உருவாக்கும் கேலரிக்கு கண்டிப்பாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை இணைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைபீர்களேயானால் MP3 Joinerஅல்லது Audacity மூலமாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை உருவாக்கிக்கொள்ளவும் .

சுருங்கக்கூறின் உங்களுடைய ஆடியோ கிளிப் « useraudio”என்ற பெயரில் MP3ஆக‌ இருக்கவேண்டும். இனி இந்த ஆடியோ கிளிப்பை C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Presets\Web Photo Gallery\Flash – Gallery 2என்ற இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

alt
இப்போது போட்டோஷாப் ஐ இயக்கவும் File,Automate,Web Photo Galleryஎன்பதனை தேர்வு செய்யவும்.
alt
Styles என்பதில் « Flash-Gallery 2 » என்பதனை தேர்ந்தெடுக்கவும் Source Images என்பதில் நீங்கள் சேமித்துள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும் பிறகு destination இல் நீங்கள் உருவாக்கிய புதிய போல்டரை தேர்வு செய்யவும். பின்னர் Optionsஇல் Large Imagesஎன்பதனை தேர்வு செய்யவும் கடைசியில் Optionsஎன்பதில் Bannerஎன்பதை தேர்வு செய்து உங்களின் வெப் கேலரிக்கு பெயர் கொடுத்துக்கொள்ளவும்..Options என்பதில் Custom Colors என்பதனை பயன்படுத்தி உங்களின் கேலரியின் பின்னனி நிறம் பாண்டுகளின் நிறத்தையும் கூட கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.
கடைசியாக Okஐ அழுத்தவும் .
alt
இனி போட்டோஷாப், கேலரியை உருவாக்கிவிடும். கேலரி தயாரானதும் நீங்கள் தேர்வு செய்திருந்த destinationபோல்டரில் உள்ளே index.htm என்ற பைலை இணைய உலாவியில் திறந்து பார்த்து மகிழலாம் மேலும் உங்களின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் .

Post a Comment

0 Comments