கணினி பாதுகாப்பு- சில குறிப்புகள்

கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்

பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.

* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)

* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)

* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்

* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)

Autorun Disable செய்தல்

* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.

* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.

* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள்.
User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).

* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்

எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்

* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும்

* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது

* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.

* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!


பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.

Post a Comment

0 Comments