இணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள்

Ctrl + N : புதிய விண்டோவை open
Ctrl + T : புதிய tab open பண்ணுவதற்கு உதவும்.
Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.
Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.
Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.
F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.
Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.
Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.
Ctrl + E : இது உங்கள் cursor Browser இன் search bar க்கு நகர்த்தும்.
Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.
Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.
Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.
Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.
Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.
Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.
Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்
Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்
Ctrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.
Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு.
Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு.

Post a Comment

0 Comments