ட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers

விண்டோஸ்ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே அதனுடன் சேர்த்து ட்ரைவர்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சவுண்ட், வீடியோ, ஈதர்நெட் என அனைத்துக்கும் தனித்தனியாக ட்ரைவர்களை நிறுவ வேண்டும். அதுவும் ட்ரைவர் பேக்அப் இல்லாமல் ஒரு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய பிறகு அந்த கணினிக்கு தேவையான ட்ரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் பெரும் அவஷ்த்தைதான். புதிதாக இணையத்தில் இதற்கான ட்ரைவரை தேடிப்பிடித்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் நம்முடைய நண்பர்களிடம் இருக்கும் ட்ரைவர் சீடியை வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இது சில நேரங்களில் காலை வாரிவிடும். குறிப்பிட்ட ட்ரைவர் மட்டும் நமக்கு கிடைக்காது. இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி ஸ்கேன் செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு குறிப்பிட்ட ட்ரைவர் அப்டேட் காண்பிக்கப்படும். வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ளவும்.



இந்த மென்பொருளின் உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


இப்போது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள ட்ரைவர்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

Post a Comment

0 Comments