தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் தரும் மென்பொருள் !


தமிழில் தட்டச்சு செய்வது சிலருக்கு சவாலான விஷயமாக இருக்கும். முக்கியமாக பதிவு எழுதுபவர்களுக்கும் பதிவுகளில் கருத்துக்களை எழுதுபவர்களுக்கும் தமிழ் தட்டச்சு மிகவும் அவசியமானது .

இதற்கு பல மென்பொருட்கள் உள்ளன என்றாலும் கூகுள் தரும் GOOGLE IME எனும் இந்த இலவச மென்பொருள் மூலம் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக உள்ளது .

இதை WINDOWS XP OS  ல் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம் .

முதலில் இங்கே கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும் .

அதன் பிறகு control panel ஐ திறந்து Regional and language option ஐ திறக்கவும்.இதில் languages எனும் tab ஐ தேர்வு செய்து அதில் details ஐ சுட்டவும் .

அடுத்ததாக settings tab ல் Tamil ஐ தேர்வு செய்து ADD பட்டனை அழுத்தி OK அழுத்தி வெளியேறவும் .

இப்போது உங்கள் TASK BAR ல் TA என தமிழ் மொழிக்கான சுட்டி இணைந்திருக்கும் .

இனி நீங்கள் MICROSOFT WORD ஐ திறந்து TASK BAR  ல் உள்ள TA ஐ கிளிக் செய்து விட்டு தமிழில் தட்டச்சு செய்யலாம் .இதில் எழும் சந்தேகங்களை கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் .

Post a Comment

0 Comments