ஆன்லைன் வாசகர்களை கண்காணிக்க...


பதிவர்களில் யாரும் தங்கள் வாசகர்களை பற்றிய விவரங்களை (Stats) அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள். தங்கள் ப்ளாக்கிற்கு எங்கிருந்து வருகிறார்கள்? எந்த தளங்கள் நமக்கு பரிந்துரை செய்கிறது? தேடுபொறியில் எந்த வார்த்தைகளை தேடுவதன் மூலம் வருகிறார்கள்? என்பதனை தெரிந்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ப்ளாக்கை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

அவ்வாறு தெரிந்துக் கொள்வதற்கு Blogger Stats பயன்படுகிறது. ஆனால் அதில் உள்ள குறைபாடு, முதல் பத்து விவரங்களை மட்டும் தான் காட்டும். முழு விவரங்களை பார்ப்பதற்கு கூகிள் அனலிடிக்ஸ் தளம் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உங்கள் ப்ளாக்கை அதில் இணைக்க ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

தற்போது கூகுள் அனலிடிக்ஸ் தளம் நமது தளத்தில் ஆன்லைன் வாசகர்களின் விவரங்களை உடனுக்குடன் பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Real-Time (Beta) என்று பெயரிட்டுள்ளது. தன்னுடைய மற்ற தளங்களை போல அனலிடிக்ஸ் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியுள்ளது கூகிள். இந்த Real-Time வசதி புதிய தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும். பழைய தோற்றத்தில் நீங்கள் இருந்தால், மேலே New Version என்பதை க்ளிக் செய்து புதிய தோற்றத்திற்கு மாறிக் கொள்ளுங்கள்.

அந்த பக்கத்தில் மேலே Dashboards என்னும் Tab-ஐ க்ளிக் செய்து, Sidebar-ல் Real-Time என்பதற்கு கீழே Overview என்பதை க்ளிக் செய்யுங்கள்.



மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று விவரங்களை காட்டும். இதன் மூலம் பின்வரும் தகவல்களை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

Location
ஆன்லைன் வாசகர்களின் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ளலாம். வாசகர்கள் இருக்கும் நாட்டின் பெயரை க்ளிக் செய்தால் அவர்களின் புவியிடத்தினையும் (Geolocation) காட்டும்.
மேலே உள்ள படத்தில் பார்ப்பது என்னுடைய இருப்பிடம் (அப்படீன்னு கூகுள் சொல்கிறது). படத்தில் உள்ள +25.271139 +55.307484 என்பது Latitude & Longitude ஆகும். இதன் மூலம் தான் உலக வரைப்படத்தில் ஒரு இடத்தை கணிக்க முடியும். இந்த எண்களை + குறியையும் சேர்த்து maps.google.com தளத்தில் தேடினால் இருப்பிடத்தை காட்டும்.

இந்த  வசதியால் வாசகர்கள் (தற்போது) பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் இருக்கும் நாட்டினை சரியாக சொன்னாலும், இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது.

Traffic Sources:

வாசகர்கள் எங்கிருந்து நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.


Content:

தற்போது எந்த பக்கத்தில் வாசகர்கள் இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.



வழக்கம் போல கூகிள் தளம் இந்த வசதியை சிலருக்கு மட்டும் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லைஎன்றால், இங்கே க்ளிக் செய்து பதிவு செய்துக் கொள்ளுங்கள். நான்  கடந்த மாதம் 29-ஆம் தேதி பதிவு செய்தேன். நேற்று தான் இவ்வசதி எனக்கு வந்தது.

எனக்கு இந்த வசதி பிடித்துள்ளது. உங்களுக்கு?

Post a Comment

0 Comments