உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி?

இந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதிவு எழுதும் நண்பர்களுக்கு இந்த தொடர் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் ஒரு வலைப்பூ (Blog) ஆரம்பித்து, அதில் பதிவு (Post) எழுதியவுடன் உங்கள் பதிவை படிக்க யாருமே வரமாட்டார்கள் காரணம் உங்கள் வலைப்பூ பற்றி யாருக்குமே தெரியாது.இதை பிரபலப்படுத்த நீங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அவை என்ன என்ன என்பதை வரும் தொடர்களில் ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

இன்று திரட்டிகள் மூலம் அதிக வாசகர்களை கொண்டுவருவது எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய தளத்திற்கு (என்னுடையது மட்டும் அல்ல தமிழில் வலைப்பூ வைத்திருக்கும் அனைவருக்கும்) அதிக வாகசர்கள் வருவது இந்த திரட்டிகள் மூலமாகத்தான்.

இதில் பல பேரும் தங்களுடைய புதிய பதிவுகளை இணைத்துக்கொள்வர்கள்.இணையத்தில் உலா வரும் வாசகர்கள் உங்களுடைய பதிவின் தலைப்பை பார்த்து விட்டு பிடித்து இருந்தால் அந்த பதிவை முழுமையாக படிப்பதற்காக உங்கள் வலைப்பூவிற்கு வருவார்கள்.

தமிழ் வலைப்பூக்கல் எப்படி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதோ அதே போல்தான் இந்த திரட்டிகளின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதில் எல்லா திரட்டிகளிலும் இணைப்பதை விட மிக பிரபலமான திரட்டிகளான இன்ட்லி , தமிழ் மணம் , தமிழ்10, தமிழ்வெளி, உலவு ,யு டான்ஸ் போன்றவற்றில் உங்கள் பதிவை இணைத்தால்  போதும் நிச்சயமாக அதிகம் பேர் வருவர்கள்.

http://ta.indli.com/
http://tamilmanam.net/
http://tamil10.com/
http://tamilveli.com/v2.0/index.html
http://ulavu.com/
http://udanz.com/


இதில் அனைத்திலும் உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.பின் உங்களுடைய புதிய பதிவுகளை அந்த திரட்டியில் இணைத்தால் சரி.ஆனால் தமிழ் மணமும் தமிழ் வெளியும் உங்களுடைய புதிய பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் (மீண்டும் மீண்டும் போய் இணைக்க தேவையில்லை)


வரும் தொடர்களில் மேலும் எப்படி அதிக வாசகர்களை கொண்டுவருவது என்று பார்ப்போம்.


Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

https://plus.google.com/115862170522466121930

https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692



இந்த தொடர் பதிவை நான் இங்கு தொடர்ந்து எழுதலாமா? வேண்டாமா?

Post a Comment

0 Comments