மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள்

ஜனவரியிலேயே கோடை தொடங்கிவிட்டது. ஏசிக்கு செலவாகும் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த ஏதேனும் வழி சொல்லுங்களேன்.

பதில் சொல்கிறார் பொறியாளர்  குருலிங்கம்

ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ,

துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும்.

சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும். பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம்.

Post a Comment

0 Comments