கூகுள் கிளாஸ்

குடிக்குற கிளாஸ் இல்லப்பா இது.. 
கூகுள் கண்ணாடி( Google Glass ) எப்படிச் செயல்படும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது கூகுள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த பயனீட்டாளர், கூகுள் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த நாளை ஆரம்பிக்கிறார். காபி குடிக்கும்போது அன்றைய நாளுக்கான திட்டங்களை அவரது காலண்டரில் இருந்து எடுத்துக்காட்டுகிறது கூகுள் கண்ணாடி. மதியம் 2 மணிக்கு நண்பரைப் புத்தகக் கடை ஒன்றில் சந்திக்கும்படி சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிடித்த இசையை ஒலிக்கச் செய்துகொள்கிறார். ரயில் நிலையம் அருகில் வரும்போது, ரயில் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வருகிறது. 'அதற்குப் பதில் நடந்து செல்கிறீர்களா?’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள்.  இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் செய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்!’ என்றபடி மொட்டைமாடியின் முகப்பில் நின்றுகொண்டு கிதாரை வாசிக் கிறார். எதிரே கடலின் பின்னணியில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காதலியும் பார்க்கும் வகையில் ஷேர் செய்துவிட்டு கிதார் வாசிக்கிறார். காதலி அதை ரசிக் கிறார்.

மேலும் தெரிந்து கொள்ள,
https://plus.google.com/111626127367496192147/posts

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9c6W4CCU9M4

Post a Comment

0 Comments