2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்

குறைந்த விலையில் மக்களை  ஈர்க்கும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை  இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த  இருக்கிறது மோசிலா ஃபையர்பாக்ஸ்.

             இந்தியாவில் இன்னும் ஸ்மார்ட் போன்  பயன்படுத்தாதவர்களின் எண்ணிகை மிக  அதிகம்.  இவர்கள் முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள்   IOS .BB10 போன்ற விலை  உயர்ந்த போன்களை விரும்புவது  இல்லை அவர்கள்  குறைந்த விலையிலேயே  எதிர்பார்க்கின்றனர். இவர்களை சந்தையாக குறிவைத்தே   இந்த திட்டம் அறிமுகப் படுத்தபட   இருக்கிறது.

இதுவரை internet explorer போல இணைய உலவியாக  இருந்த firefox  தற்போழுது  ஆண்ராய்டு போல ஒரு  முழு கைபேசி  இயங்குதளமாக சந்தைக்கு வந்துள்ளது.

இந்தவகை ஃபோன்கள் Apps களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  இணையதளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கபட்டிருக்கிறது.   html5 wbrtc or risp போன்றவைகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது .இவை மேலும் Appsஐ  இணையதளமாக  காட்டும் தன்மையுள்ளது.

இந்த ஃபோன்கள்  சிங்கில் கோர் பிராஸசர்களை கொண்ட இந்த போன்கள் இந்திய  ஆண்ட்ராய்ட் சந்தையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும்  என எதிர்பார்க்கப் படுகிறது.  இதன் முலம் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் என்கிற கனவு நினைவாகும். இதில் ஃபையர்பாக்ஸ்  கணக்கு மூலம் மார்கெட் பிளஸில் உள்ள Appsகளையும்  பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதே வேளையில் விண்டொஸ் போன்களுக்கு போட்டியாக ”ஆண்ராய்ட் ஒன்” எனும் பெயரில், முகநூல் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களுக்கு குறைந்த் விலையில் கைபேசிகளை கூகுல்  அறிமுகம் செய்துள்ளது.

                  60000 ரூபாய்  விலையில் ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகபடுத்தும் போது நமக்கு 2.299  ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் கிடைக்க  போகிறது .

Post a Comment

0 Comments