28,000 ஆயிரம் டாலரை மிச்சம் பிடிக்க..போய் மலேசிய விமானம் அதிரும் தகவல் !

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்கிரைன் வான் பரப்பில் வைத்து, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. நூற்றுக்கணக்கான பயணிகள் இறந்துபோக ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்சிபடையே காரணம் என்று கூறப்பட்டது. அதுவே உண்மையும் ஆகும். இதேவேளை MH 17 என்னும் குறியீடு கொண்ட இந்த விமானத்தை, கிளர்சியாளர்கள் F 17 ரக போர் விமானம் என்று பிழையாக கணித்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு அப்பால் ஒரு தகவல் தற்போது வெளியாகி, உலகை உலுப்பியுள்ளது. அது என்ன தெரியுமா ? போர் நடந்துகொண்டு இருக்கும் பகுதியூடாக விமானத்தை மலேசிய விமானிகள் செலுத்தியது காசை மிச்சம் பிடிக்க தான் என்பதாகும் !
 
குறித்த இந்த விமானம் வழமையான பகுதியூடாக சென்றிருக்கவேண்டும் எனவும். (அதாவது சர்வதேச பயண முறை) ஆனால் இவர்கள் குறுக்கு வழி எடுக்க முற்பட்டுள்ளார்கள். இதனால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டரை மிச்சம் பிடிக்க முடியும். இதனால் எரிபொருள் செலவாக மட்டும் 28,000 ஆயிரம் டாலரை மிச்சப்படுத்த முடியும். ஆனால் இவர்கள் சென்ற பகுதி யுத்தம் கடுமையாக நடந்துகொண்டு இருக்கும் பகுதி என்று, விமானிகளுக்கு ஏற்கனவே தெரியும். அப்படி இருந்தும் இவர்கள் ஷாட் கட் ரூட் ஒன்றை எடுத்துள்ளார்கள் என்றால், இந்த விமானிகள் மற்றும் மலேசியாவின் ஏர்- லைன்ஸ் அதிகாரிகள் அனைத்து பயணிகளையும் ஆபத்தில் போட்டு உள்ளார்கள் என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்றால் அங்கே சூடு படத்தான் செய்யும். அந்த பகுதி ஊடாக பறப்பில் ஈடு பட எவ்வாறு மலேசிய அதிகாரிகள் அனுமதித்தார்கள் ? இதுவே தற்போது எழுந்துள்ள கேள்வி ஆகும். படு நஷ்டத்தில் தற்போது ஓடும் மலேசிய விமானத்தில் பயணிகள் ஏன் ஏறுவது இல்லை என்று இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இவ்விமானம் ராசி இல்லாத விமானம் என்பது போக, பயணிகளை படு பாதாளத்தில் தள்ளியுள்ளது மலேசிய ஏர் லைன் விமானம். அத்தோடு மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் அது இழந்து வெகு நாட்கள் ஆகிறது.

Post a Comment

0 Comments