‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி

புதுடில்லி: ‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

இத்திட்டம் என்பது ஒரு அழைப்பும் இல்லை , கோஷமும் இல்லை. இது சிங்கத்தின் முதல் காலடி . இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி: ‘மேக் இன் இந்தியா ‘-திட்டம் தொடர்பாக விமர்சனங்கள் வருகிறது. மேக் இன் இந்தியா என்பது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. கட்நத அரசின் மீது கொள்கை அடிப்படையிலான குறைபாடுகள் இருந்தது. சமீபகாலமாக தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டு வருவதை பார்க்க முடியும். இந்த நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி . 120 கோடி மக்கள் மீது தொழில் நிறுவனம் நம்பிக்கை வைக்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவை விட்டு செல்ல மத்திய அரசு விரும்பாது. இவர்களுக்கு நான் எந்த வொரு உறுதியும் அளிக்க விரும்பவில்லை. செயல்பாட்டை நீங்களே பார்த்து கொள்ளலாம். எப்.டி.ஐ. என்பது ( பர்ஸ்ட் டெவலப் இந்தியா ) அன்னிய முதலீடு இந்தியாவின் முதல் வளர்ச்சிக்காரணி ஆகும்.

இதனை பெறுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உலகின் உற்றபத்தி மையமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். நமது குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். உலகமே இன்று ஆசியாவை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. ஆசியாவில் இருந்து எந்தவொரு தொழில் நிறுவனமும் வெளியேற கூடாது. உலகமே ஆசியாவை நோக்கி வரத்துவங்கியிருக்கின்றன. இந்ததேசம் உங்களுடையது . உங்கள் நிறுவனங்கள் உலகஅளவில் ஜொலிக்க வேண்டும். இது இந்தியாவை பலமடைய செய்யும். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, இலாபம், தேவைகள் நிறைந்து இருக்கின்றன. நான் தொழில் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன் நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த தொழில்கள் துவக்க முன் வரவேண்டும்.

‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் சிங்கத்தின் முதல் காலடி எடுத்து வைப்பதற்கு சமம் ஆகும். இந்த திட்டத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அறிவுத்திறன் மேம்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்கு திறன் பெரும் உதவியாக இருக்கும். மங்கள்யான் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்தன் மூலம் நமது இளைஞர்கள் அறிவுத்திறன் உலகிற்கு பறைசாட்டப்பட்டுள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.

சுற்றுலாதுறையை நாம் மேப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பல்வேறு வளங்கள் உள்ளன. இதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
‘மேக் இன் இந்தியா ‘உலக அளவிலான வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு பிரசாரம் இல்லை. இது ஒரு கோஷமில்லை, இது ஒரு அழைப்பு அல்லை. பொறுப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கு மாநில, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். வங்கி கணக்கு துவக்கம் இந்தியாவின் வளர்ச்சியை காட்டியுள்ளது. மாநில அளவிலான முதலீடு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். இங்கு வந்திருக்கும் தொழில் துறையினர் உலக அளவிலான சந்தையில் ஜொலிக்க வேண்டுமென்றால் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Post a Comment

0 Comments