FlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன் மாணவர்கள் !

NIFT என்று அழைக்கப்படுகிற தேசிய ஃபேசன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (National Institute of Fashion Technology) இந்தியாவின் மிக முக்கியமான இணையவழி வர்த்தக                   (e commerce) நிறுவனமான Flipkart இணையதளத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU)கையழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி Flipkart தளமானது NIFT மாணவர்களுக்கு உலகத் தரத்திலான சந்தை தொழில்நுட்பப் பயிற்சி வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
flipkart_NIFT_B_3-9-14
Flipkart டில் எந்த மாதிரியான ஃபேசன் பொருட்களை மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள் போன்ற தரவுகள் அடிப்படையில் கைத்தறி மற்றும் தோல் பொருள்களுக்கான சந்தை தேவை பற்றிய பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

Flipkart நிறுவனத்தின் அதிகாரி மகேஸ்வரி இது தொடர்பாக பேட்டி கொடுத்தபோது. ஃபேசன் துறை என்பது தொடப்படாத ஒரு துறையாக இருந்து வருகிறது. ஆனால் இது மிக அதிக வருமானம் தரக்கூடியத் துறை.இன்னும் யாரும் காணாத தங்கப் புதையலைப் போன்றது.

இன்று உலகம் முழுவதும் இத் துறையில் மிக அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. நல்ல தரமான, புதிய, தனித்துவமான படைப்புகளை மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விரும்புகிற வடிவமைப்புகளை தெரிந்து கொள்ளவது தொடர்பான பயிற்சிகள் பெறும்போது மாணவர்கள் எதிர்காலத்தில் மிகச் சிறந்த தொழில் முனைவர்களாக வருவார்கள் எனத் தெரிவித்தார்.
flipkart-624x416
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி ஏற்கனவே தொழில் செய்யும் NIFTயின் பழைய மாணவர்களும் Flipkart டுடன் இணைந்து வணிகம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கவே ஒப்பந்தம் போட்டு கொண்டு இருந்த நிலை மாறி உள்நாட்டு மாணவர்கள் தொழில்தொடங்க ஒப்பந்தம் போடுறது மகிழ்ச்சியான செய்திதான்.

Post a Comment

0 Comments