Google Smartwatch: பரபரக்கும் டெக்னாலஜி மார்க்கெட்!

ஏற்கெனவே ‘கூகுள் கண்ணாடி’யை எதிர்பார்த்து காட்ஜெட் பிரியர்கள் காத்திருக்க, இப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ‘கூகுள் கடிகாரம்(Google Smartwatch)’ என்று ஒரு வதந்தி பரவி வருகிறது!

சாம்சங் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் கடிகாரத்தை வெளியிட்டுவிட்ட சூழ்நிலையில், கூகுளும் அப்படி ஒரு கடிகாரத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கிறதாம். மற்ற ஸ்மார்ட்வாட்ச்களையெல்லாம்விட மிகவும் சிறப்பானமுறையில் இதனை உருவாக்கிவருகிறார்களாம்!
ஆனால், மக்கள் தனியே செலவு செய்து ஒரு வாட்ச் கட்ட விரும்புவார்களா? ’ஃபோனில் நேரம் பார்த்துக்கொண்டால் போதும்’ என்று நினைப்பார்களா?

அங்கேதான் ‘Google Now’ தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படும். பாக்கெட்டில் உள்ள ஃபோனை எடுத்து விவரங்களைப் பார்ப்பதைவிட, வாட்ச்சில் தினசரி அப்பாயின்ட்மென்ட்கள் தொடங்கி கிரிக்கெட் ஸ்கோர்வரை எல்லாவற்றையும் தந்துவிடலாம். மக்கள் இதற்குப் பழகிவிட்டால் இவற்றை நிச்சயம் தொடர்ந்து வாங்குவார்கள்.

குறிப்பாக, கூகுள் ஸ்மார்ட்வாட்ச்சை அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டியிருக்காது. ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டுப் பல மணி நேரங்கள் தொடர்ந்து பயனப்டுத்தலாம்.

கூகுள் வாட்ச் எப்போது கிடைக்கும் என்பது நிச்சயமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உற்பத்தியின் நிறைவுக் கட்டத்தில் இருக்கிறது என்று விஷயமறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. விரைவில் இதனைப் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கிப் பல நாடுகளில் பரவலாக விற்பனைக்குக் கொண்டுவரும் கூகுள்!

அதேசமயம், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனையில் பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை. கூகுள் அந்த நிலையை மாற்றுமா? ஆவலுடன் காத்திருக்கிறார்கள் மக்கள்!

Post a Comment

0 Comments