WhatsApp விற்பனையால் ப்ளாக்பெர்ரிக்கு நன்மை உண்டா?

ஃபேஸ்புக் நிறுவனம் WhatsAppஐ வாங்கியதுமுதல், ப்ளாக்பெர்ரியின் பங்கு மதிப்பு சரிந்துவருகிறது.

ஏன்?

WhatsAppக்கு $42 per user என்று விலை நிர்ணயித்திருந்தது ஃபேஸ்புக். இதன்படி பார்த்தால், ப்ளாக்பெர்ரி மெஸேஜிங் சிஸ்டத்தின் மதிப்பு $3.6 பில்லியன் ஆகும்.

ஆனால், இன்றைய தேதியில் அவ்வளவு பணம் கொடுத்து அதனை வாங்க யாரும் தயாராக இல்லை. காரணம், WhatsApp உடன் ஒப்பிடும்போது, பிளாக்பெர்ரி மெஸேஜிங் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனை BGC Partners நிறுவனம் தெரிவிக்கிறது.

‘எங்களுடைய மெஸேஜிங் சேவையை நன்கு வலுவாக்கியபிறகு, அதை விற்பதைப்பற்றியோ, தனி நிறுவனமாக்குவதைப்பற்றியோ யோசிக்கலாம்’ என்கிறார் ப்ளாக்பெர்ரி தலைவர் ஜான் சென். ஆனால், அது எப்போது? எப்படி?




’இதனால், அவர்களுடைய மெஸேஜிங் சேவை WhatsAppஐப் பிடிப்பது சிரமம்’ என்கிறது Bloomberg நிறுவனம். ‘பேசாமல் அவர்கள் மொத்த நிறுவனத்தையும் மைக்ரோசாஃப்டிடம் விற்றுவிடலாம்’ என்கிறது Hudson Square Research நிறுவனம்.

‘ஒருவேளை யாராவது பிளாக்பெர்ரி மெஸேஜிங் சேவையைமட்டும் வாங்க முன்வந்தாலும், WhatsApp பயனாளர்களுக்குக் கிடைத்த விலை பிளாக்பெர்ரி மெஸேஜிங் பயனாளர்களுக்குக் கிடைக்காது’ என்கிறார் Atlantic Equities ஆய்வாளர் ஜேம்ஸ் கார்ட்வெல். ‘ஏனெனில், அந்தப் பயனாளர்கள் வேறு சேவைகளுக்குத் தாவிவிடுவார்களோ என்ற கேள்வி எப்போதும் உண்டு!’

WhatsAppல் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மில்லியன் பேர் சேர்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் அது 1 பில்லியன் பயனாளர்கள் என்கிற இலக்கைத் தொட்டுவிடும் என்று ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கருதுகிறார்.

‘பிளாக்பெர்ரி மெஸேஜிங் சேவையைப்போல் WhatsApp ஐந்து மடங்கு பெரியது, அதிவேகமாக வளர்கிறது’ என்கிறார் BGC Partners ஆய்வாளர் காலின் கில்லிஸ், ‘அதனால்தான் அதற்கு அவ்வளவு விலை தரப்பட்டது. அது எல்லாருக்கும் கிடைக்குமா? நம்பர் 1 கம்பெனிக்குமட்டும்தான் கிடைக்கும்!’

உதாரணமாக, சமீபத்தில் Viber என்ற மெஸேஜிங் நிறுவனம் Rakuten என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வாங்கப்பட்டபோது, அதற்கு $900 மில்லியன்மட்டுமே தரப்பட்டது. Viberஐவிட பிளாக்பெர்ரி மெஸேஜிங்கில் குறைந்த பேர்தான் இருக்கிறார்கள் என்பதால், WhatsApp விற்பனையை வைத்து பிளாக்பெர்ரி மெஸேஜிங்கின் மதிப்பு 3.6 பில்லியன் என்று கணக்கிடுவது தவறு.

‘இன்னொரு விஷயம், பிளாக்பெர்ரி மெஸேஜிங் சேவைதான் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பலம்’ என்கிறார் Wedge Partners ஆய்வாளர் ப்ரயன் ப்ளெய்ர். ’ஆகவே, அவசரப்பட்டு அதை விற்றுவிட்டால் மொத்த நிறுவனத்துக்கும் ஆபத்து! தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவரும் அந்நிறுவனம் அப்படி எதையும் செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.’
‘அதற்குப் பதிலாக, அவர்கள் WhatsAppபோல வேகமாக வளர்ந்து, பலரை ஈர்க்க முயற்சி செய்யவேண்டும்’ என்றார் ப்ரயன் ப்ளெய்ர். ‘அதற்கு, அவர்கள் தனித்துவமாக ஏதாவது செய்யவேண்டும். அப்போதுதான் மக்கள் மற்ற மெஸேஜிங் அப்ளிகேஷன்களை விட்டுவிட்டு ப்ளாக்பெர்ரியைத் தேடி வருவார்கள். அதன் சந்தை மதிப்பு உயரும். விற்பனை செய்யும்போது நல்ல விலையும் கிடைக்கும்!’ என்கிறார் Imperial Bank Of Commerce ஆய்வாளர் டொட் காப்லாண்ட்.

Post a Comment

0 Comments