பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது
மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300 என்ற இந்த ஸ்மார்ட்போன்
ஆன்லைனில் ரூ. 3,300க்கு கிடைக்கன்றது.
டூயல் சிம் மூலம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு கிட்காட் மூலம்
இயங்குகின்றது. 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும்
512 எம்பி ராமும் இதில் உள்ளது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300, 0.3 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க
கேமராக்களை கொண்டுள்ளது. 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை
நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi, GPS,மைக்ரோ
யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் 2.1 வழங்கப்பட்டுள்ளன. பேட்டரியை பொருத்த வரை
1200 எம்ஏஎஹ் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments