நாடு முழுவதும் 3G, 4G, வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைக்க பி.எஸ்.என்.எல். ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு


நாடு முழுவதும் 3G, 4G நெட்வோர்க் மற்றும் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்க அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி, பி.எஸ்.என்.எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், ‘வை-ஃபை என்பது பி.எஸ்.என்.எல்-லுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. ஆனால், அதை மட்டுமே தனியாக நாங்கள் கொண்டு வர முடியாது. அப்படி செய்தால் அது வெற்றி பெறாது. அவற்றை 3G, 4G நெட்வோர்க்குடன் இணைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் வை-ஃபை-க்கு மாறுவார்கள். இன்னும் இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குள் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைக்க ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவுள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு முழுவதும் 2500 வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை பி.எஸ்.என்.எல். அமைக்கும்.’ என தெரிவி்த்தார்.

Post a Comment

0 Comments