நொடிகளில் விற்று தீர்ந்த ஹூவாய் ஹானர் 4எக்ஸ் !!!


ப்ளாஷ் விற்பனை முறை இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக ஹூவாய் ஹானர் 4 எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை அமைந்துள்ளது. ப்ளிப்கார்ட் மூலம் ப்ரெத்யேகமாக விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்ட பின் சில நொடிகளில் விற்பனை முடிந்து விட்டது. இம்முறை எத்தனை யுனிட் விற்பனை செய்யப்பட்டது என்பதில் அந்நிர்வாக தரப்பில் தொடர்ந்து மவுனம் காக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஹூவாய் ஹானர் 4 எக்ஸ் முன்பதிவுகள் சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டதாக இந்நிறுவனம் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட விற்பனைக்கான முன்பதிவு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும். ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இதன் விற்பனை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 4ஜி மற்றும் யுரேகா ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை சற்று அதிகம் தான் என்றாலும் விலைக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் ஹானர் 4 எக்ஸ் புதிய EMUI 3.0 UI கொண்டிருப்பதோடு HSPA+ மற்றும் 4G LTE போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் டூயல் சிம் கார்டு ஸ்லாட்களும் கொண்டுள்ளது. இதோடு 5.5 இன்ச் 720பி ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 SOC கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments