ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 640, 640XL

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640, 640XL ஸ்மார்ட்போன்களை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட தயாராகிவிட்டது. அதன் படி ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. லூமியா 640 ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இதோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

லூமியா 640XL 5.7 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் லூமியா 630யில் இருப்பது போன்ற ராம் மற்றும் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இரு கருவிகளும் விண்டோஸ் போன் 8.1 மற்றும் லூமியா டெனிம் அப்டேட் கொண்டிருக்கின்றது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிரைவ் ஸ்பேஸ் 30 ஜிபியும் வழங்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments