7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன விமானத்தை தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும்,
ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி
கொண்ட அதிநவீன விமானத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும்
இந்த விமானம், சுமார் 400 ராணுவ டாங்கிகளையும், அவற்றுக்கு தேவையான வெடிப்
பொருட்களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த
மூலையையும் சென்றடைந்து விடும்.
மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில்
வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரையில்
பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த விமானம், 200 டன் எடை கொண்ட
பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும் என ரஷ்யாவின் ராணுவ
தொழில் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments