லப் டப் சத்தம் போடாத செயற்கை இதயம் ரெடி

இதயம் ஒரு முக்கியமான உறுப்பு. மூளை சாவு ஆன ஆட்களுக்கு கூட இதயம் வேலை செய்வதை பார்த்திருப்போம். அது கோமா ஸ்டேஜ் ஆனாலும் இதயம் மட்டும் சீராக வேலை செய்து கொண்டே இருக்கும் ஒரு அதிசயம் – கடவுளின் படைப்பு. எல்லா உறுப்புகளுக்கும் மாற்று உறுப்பை கண்டுபிடித்தாலும் இதயத்தை இயங்க வைக்கும் செயற்கை இதயம் கடந்த பத்து ஆண்டுகளாய் வெவ்வேறு வகையில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில் பல செயற்கை இதயங்களை கண்டுப்பிடித்து டெஸ்ட் செய்தவண்ணம் இருந்தாலும் இப்போது ஒரு புது வகை செயற்கை இதயத்தை இப்போது தான் மனிதனுக்கு பொருத்தி இது பக்காவாக வேலை செய்கிறது என்று டெக்ஸாஸ் இதய மருத்துவமனை மற்றும் உலகத்தின் சில முக்கிய மருத்துவமனைகள் உறுதிபடுத்தியுள்ளது. 2014-ம் கண்டுப்பிடிப்பு இது.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த செயற்கை இதயம் துடிக்காது அதனால் பல்ஸ் என்னும் நாடி துடிப்பே இல்லாமல் வெறும் பம்ப் போல மட்டும் தான் இயங்கும். இதன் மூலம் இதயத்துக்கு தேவையான ரத்தம் மற்றும் ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்ற வாறு ரத்த அழுத்ததை கூட இந்த இதயத்தில் செட்டிங்கிஸ் மூலம் செய்வதால் உயர் ரத்த அழுத்தம் ஸ்ட்ரோக் மற்றும் ஹேமரேஜ் கட்டுபடுத்த முடியும்.

ஹும்..இனிமே பசங்க‌ என் இதயத்தில் நீ மட்டும் பாரு – உன்னை பார்த்த உடனே அபஸ்வரம் ராம்ஜி டிரம்ஸ் அடிக்கிற மாதிரி தடதடன்னு அடிக்குது என்னப் பொண்ணுடா? நீனு பீலா வுட்டா நம்பாதீங்க பொண்ணுகளே……

Post a Comment

0 Comments