பேஸ்புக் நிறுவனத்தின் புதிய இணையதளம், என்ன எதிர்பார்க்கலாம்..?

பேஸ்புக் நிறுவனம் தனித்துவம் வாய்ந்த இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் தனது மெசேஜிங் கருவியான மெசன்ஜரை இணையத்திற்கு கொண்டு வந்துள்ளது. தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் இந்த இணைதளத்தில் விரைவில் மற்ற மொழிகளும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாடிக்கையாளர்கள் இந்த தளத்தில் தங்களது நண்பர்களுடன் சாட் செய்தல், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுதல், ஃபைல் மற்றும் வாய்ஸ் மெசேஜ் போன்றவைகளை அனுப்ப முடியும்.

வாட்ஸ்ஆப் போன்று வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. Messenger.com மூலம் பேஸ்புக்கில் பல அம்சங்களை புதிதாக சேர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. இதன் முக்கிய அம்சமாக பணம் பறிமாற்றம் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது வரை பேஸ்புக்.காம் இல் இருந்து சாட் சேவையை நிறுத்தவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், ஓஎஸ் எக்ஸ் பயன்படுத்துபவர்கள் தனியாக மெசன்ஜர் ஃபார் மேக் என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதோடு இது பேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ சேவை இல்லை என்றாலும் இந்த சேவை இலவசமாக கிடைப்பது ஓஎஸ் எக்ஸ் பயனாளிகளுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இருக்கும்.

Post a Comment

0 Comments