மாமனிதனின் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆன கதை.



மாமனிதனின் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆன கதை.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அப்துல்கலாம் என்ற மாமனிதன் பாரதத்தின் குடியரசு தலைவராக ஆனதை நாம் அறிவோம் ஆனால் அது நடந்தது எப்படி என்பதையும் சேர்த்து தெரிந்து கொண்டால் நல்லது தானே. இதோ அதன் பின்னணி தகவல்கள்.

(இவர்களை பாராட்டு விதமாக இந்தத் தகவலை பகிரவும்)

2002ல் ஜனாதிபதி தேர்தல் வருகிறது என்பதை உணர்ந்த ஒரு இளம் பாஜக வக்கீலின் மனது பாஜகவை சார்ந்த நம்மவர் யாரையும் கொண்டு வர முடியாதே என துடிக்கிறது. பாஜகவால் போதிய பலத்துடன் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தி வைக்க முடியாத அரசியல் சூழ்நிலை. 23 கட்சிகளின் கூட்டணியும் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்தது. என்னதான் மக்களவையில் பலம் இருந்தாலும் மாநிலங்கள் அவையிலும், பிற மாநிலங்களிலும் பாஜகவால் பெரிதாக தங்களுக்கான ஆதரவை உருவாக்க முடியாதகாலக்கட்டம். அப்போதுதான் அந்த 30 வயது வழக்குரைஞரின் மனதில் இந்த யோசனை தோன்றியது. போக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை நாயகனும், தலைசிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய முஸ்லீமுமான டாக்டர் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினால் என்ன என்று. 2 சக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டு இருந்த அவன் வண்டியை பிரேக் அடித்து தனது செல்போனில் கட்சியின் மாநில சட்டசபைத் தலைவராக அன்று இருந்த திரு. கே.என். லட்சுமணன் அவர்களை அழைக்கிறான். தனது மனதில் தோன்றிய எண்ணத்தை காரண காரியங்களுடன் விவரிக்கிறான். அவனது வாதத்தை ஏற்ற கே.என். லட்சுமணன் உடனடியாக அவனிடம் அதை அப்படியே எழுதிக் கொடுக்குமாறு கூறுகிறார். அவனும் உடனடியாக அதை செய்து அவரிடம் நேரில் சென்று வழங்குகிறான். கடிதம் அன்றைய கட்சித்தலைவராக இருந்த தமிழகத்தை சார்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து அத்வானி-வாஜ்பாய் என பயணப்பட்டு கருத்தொற்றுமை ஏற்ப்படுகிறது.

கலாம் அவர்களிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைக்க தனிமனித ஒழுக்கத்திலும், புத்திசாலித்தனத்திலும் அவருக்கு இணையான ஒரு மனிதன் வேண்டும் என்ற விதத்தில் அவரிடம் பேசும் பொறுப்பு திரு. எஸ். குருமூர்த்தி அவர்களிடம் வழங்கப்படுகிறது. மாயக்கண்ணனை போல ஒரு புன்முறுவலுடன் எதையும் சாதிக்கும் திரு. குருமூர்த்தி பேசினால் கலாம் வேண்டாம் என்றா சொல்ல முடியும். அவரும் சம்மதிக்கிறார். காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க மூலயாம் சிங் யாதவின் உதவியை நாடுவதாக திட்டமிடப்படுகிறது. அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்குவது பாஜகவின் திட்டமில்லை, மூலயாம் சிங்கின் திட்டத்தை பாஜக ஏற்பது போன்ற ஜோடனை உருவாக்கப்படுகிறது. மூலயாம் முன்மொழிகிறார், பாஜக வழிமொழிகிறது… ஒரு மாமனிதனின் உச்சம் தொட்ட கதை இது.

காங்கிரஸ் தனது தரப்பில் முன்னாள் மஹாராஷ்டிர கவர்னராக இருந்த அலெக்சாண்டர் அவர்களை கொண்டு வரத்திட்டமிடுகிறது. நடுவில் லக்ஷ்மி செகால் வந்து முளைக்கிறார். ஆக இந்தத்திட்டம் முறியடிக்கப்பட்டு பெரும் ஆதரவுடன் டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாகிறார்.

Post a Comment

0 Comments