விலங்கினங்களின் பாதுகாப்பு நடவடிக்கை


mull fish
Puffer மீன்

விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், உயிரினங்களில் காணப்படும் அற்புதங்களில் ஒன்றாகும். பல உயிரினங்கள் தங்களுக்கு வரக்கூடிய இடையூறுகளைப் பற்றி மதிப்பிட்டு அதனை தடுக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டுபிடிக்கும் திறமைகளைக் கொண்டுள்ளன.


உதாரணத்திற்கு முந்தைய தொடரில் நாம் ஏற்கெனவே அறிந்த கறையான்கள் உருவாக்கும் புற்றின் சுவர்கள் ஒரு பெரிய கடப்பாறையைக் கொண்டு தகர்க்க முடியாத அளவுக்கு கனமும், பலமும் கொண்டது. தூக்கணாங்குருவிகள் தங்களது பிரதான எதிரியான பாம்புகள் கூட நுழையமுடியாத அளவுக்கு தங்களது கூடுகளின் வாசலை அமைத்துக் கொள்கின்றன. சில வகை சிலந்திகள் தங்கள் வலைகளில் அறியாமல் நுழைந்து விடும் பிற பூச்சியினங்களுக்கென தனியாக ஒரு பகுதியை அமைத்து, அதில் அந்த பூச்சியினங்களை சிறைப்படுத்திவிடுகின்றன.

thookkanaanguruvi
தூக்கனாங்குருவி கூடு

தேனீக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள பிரத்யேக பாதுகாப்பு முறையை கையாளுகின்றன. தேன்கூட்டை பாதுகாப்பதற்கு என நியமிக்கப்பட்டிருக்கும் தேனீக்கள், தேன்கூட்டின் மேல் பகுதியில் இருந்துகொண்டு, தங்களது கூட்டில் உள்ள தேனீக்களைத் தவிர பிற பூச்சியினங்கள் எவற்றையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தேன்கூட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தேனீ வெளியேறும்போது, மற்றொரு தேனீ அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. எல்லாவற்றிர்க்கும் மேலாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த தேனீக்கள் தங்களது சொந்த உயிரை பணயமாக வைத்தே பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன.

ஆங்கிலத்தில் ‘பீவர்’ ( Beaver) என அழைக்கப்படும் எலி இனத்தைச் சார்ந்த ஒருவகை விலங்கினம், தனது தங்குமிடத்தை தண்ணீருக்கு அடியில் அமைத்துக் கொள்கிறது. அவைகளின் தங்குமிடத்தை அடைய வேண்டுமெனில், ‘பீவர்;’ கள் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய ரகசியமான சுரங்கம் வழியாக மாத்திரமே அவைகளின் தங்குமிடத்தை அடைய முடியும். சுரங்கத்தின் உட்பகுதியில் உள்ள கடைசிப் பகுதியில் அவைகள் தங்கள் குடும்ப சகிதம் குடியிருப்பதைக் காணலாம்.

beaver-2
பீவர் என்ற விலங்கின் கூடு

உயிரினங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் உயரிய பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து உயிரினங்களிடம் தங்களை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய நுண்ணிறவு உள்ளது என அறிந்து கொள்ளலாம். அதற்கு அத்தாட்சியாக மேலே சுட்டிக்காட்டப்பட்ட உதாரணங்கள் மாத்திரம் நமக்கு போதுமானது. தவிர, ஒரு இனத்தின் எதிரி மற்றொரு இனமே என்பதை நீங்கள் உங்களது கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படியிருப்பினும், ஒவ்வொரு உயிரினமும் தங்களது எதிரி யார் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பதோடு, அவைகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கென விலாவாரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. கறையானோ அல்லது தூக்கணாங்குருவியோ அவைகளுக்கு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படக்கூடிய சிந்தனை திறன் இல்லாவிட்டாலும், தங்களது எதிரிகளைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்து வைத்திருக்கின்றன என்பது மிகவும் வியப்பானதுதான்.

Praying-Mantis-on-spider-web-2
சிலந்தி அமைத்திருக்கும் சிறை

இதனை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் உங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அறிந்திராத அல்லது பார்த்திராத ஒரு விலங்கினத்தைப் பற்றிய அல்லது இப்போதுதான் முதன் முறையாக நீங்கள் பார்க்கின்ற ஒரு விலங்கினத்தைப் பற்றிய முழு குணநலன்களையும் உடனடியாக கூறிட முடியுமா? நீங்கள் பார்க்கின்ற அந்த விலங்கினம் உண்னும் உணவு என்ன? அது எப்படி வேட்டையாடும்? அதன் எதிரிகள் யார்? என்ற விபரங்களை அந்த விலங்கினத்தை பார்த்த மாத்திரத்தில் உங்களால் கூறிட முடியுமா? கண்டிப்பாக முடியாது.

நீங்கள் முதன்முதலாக பார்த்த அந்த விலங்கினத்தைப் பற்றிய முழு விபரங்களையும் நீங்கள் அறிய வேண்டுமெனில் அந்த விலங்கினத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம் உங்களுக்குத் தேவைப்படும். அல்லது அந்த விலங்கினத்தைப் பற்றி முன்னரே அறிந்திருக்கும் யாராவது ஒருவர் உங்களுக்கு விபரங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால் சிந்தித்து செயலாற்றும் திறன் இல்லாத இந்த விலங்கினங்கள் மற்றொரு உயிரினத்தைப் பார்த்ததும், அவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்கிறதே. இது எப்படி சாத்தியம்? அவைகள் தங்கள் எதிரிகளின் பழக்கவழக்கங்கள், அவைகள் வேட்டையாடும் முறை பற்றி முன்னரே தெரிந்து கொண்டு, அவைகளிடமிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறைகளை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொள்கின்றனவா? நிச்சயமாக இல்லை.

animal-defenses-
எறும்பு தின்னி

மனிதனைத் தவிர எந்த விலங்கினமும் சிந்தித்து செயல்படக்கூடிய திறன் படைத்தவை அல்ல. அத்தோடு, விலங்கினங்களுக்கு தங்கள் எதிரிகளைப் பற்றிய விபரங்கள் ‘எதேச்சையாக’ கிடைத்திருக்கும் என்று கூறுவது நடைமுறைக்கு ஒவ்வாததும், அறிவுக்கு எட்டாதததுமாகும். ஏனென்றால் விலங்கினங்கள் தங்கள் எதிரிகளைப் பற்றி ஆய்வு செய்ய எடுக்கும் முதல் முயற்சியே அதன் மரணமாகும்.

bee
தேனி

நிச்சயமாக விலங்கினங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளையும், அதன்படி அமையும் அவைகளின் செயல்பாடுகளையும் முடிவு செய்பவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. நாம் அன்றாடம் நம் வாழ்வில் காணும் விலங்கினங்கள் மட்டுமின்றி, உலகில் வாழுகின்ற ஒவ்வொரு உயிரினமும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மதிநுட்பத்தைக் கொண்டுதான் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Source:  harunyahya.com/

Post a Comment

0 Comments