எதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர்!

நம் முன்னோர்கள் நாம் நினைத்ததை விட அதிநவீன தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி வந்தது சமீபத்திய ஆய்வுகளிலும் நிரூபணமாகியுள்ளது. 

அதன் படி கிமு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மிகவும் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கம்ப்யூட்டர் எனப் போற்றப்படும் இந்த பழைய கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்கள் மற்றும் ஆதனினை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியப்பூட்டும் தகவல்கள் ஸ்லைடர்களில்.

கம்ப்யூட்டர் உலகின் பழைமை வாய்ந்த கணினி குறித்த மர்மங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிமு60களில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படும் இந்த கம்ப்யூட்டர் வானியல் கால்குலேட்டர் போன்று செயல்பட்டுள்ளது.

1
பயன்பாடு பண்டைய கால கிரேக்கர்கள் பயன்படுத்திய இந்த கம்ப்யூட்டர் மூலம் அவர்கள் எதிர்காலத்தை கணித்தனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
2
அனலாக் கம்ப்யூட்டர் உலகின் முதல் அனலாக் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அன்டிகைதிரா இயந்திரநுட்பமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது. இதன் விசித்திரமான பொறி கிரேக்க தீவு ஒன்றின் அருகில் உடைந்திருந்த கப்பலில் கண்டெடுக்கப்பட்டது.
3
எக்ஸ்-ரே ஆராய்ச்சியாளர்கள் இதன் உடைந்த பாகங்களை எக்ஸ்-ரே இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஒன்றிணைத்துள்ளனர். புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த கருவி எப்படி வேலை செய்கின்றது என்பது தெரியவந்துள்ளது.
4
கிரகம் முன்னதாக இந்த வானியல் கால்குலேட்டரினை கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்கானிக்க கிரேக்பகர்யகள்ன்ப டுத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர்.
5
ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த கருவியின் மேல் எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து இதன் வானியல் முக்கியத்துவம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
6
விளக்கம் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை ஆய்வு செய்யது, இது குறித்த தகவல்களை கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர் மைக் எட்மண்ட்ஸ் விளக்கினார்.
7
இந்த குறிப்புகளை தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், நிறங்களை ஒருவித சிக்னல் போன்று பயன்படுத்தி கிரகணங்களை கணிதிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
8
முதல் முறை மேலும் வானியல் தவிர்த்து ஜோதிடம் கணிக்க பயன்படுத்தப்பட்ட முதல் இயந்திரநுட்ப முறையாக இதனை குறிப்பிட்டுள்ளார்.
9
அன்டிகைதிரா அன்டிகைதிரா இயந்திரநுட்பமுறையானது வெண்கலத்தால் செய்யப்பட்ட சுமார் 30 துணைக்கருவிகளை கொண்டுள்ளது. இந்த கடிகார இயந்திரநுட்பமுறையானது கிரேக்க ஆராய்ச்சியாளர்களால் சுமார் கிமு 150 மற்றும் 100 காலக்கட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
10
வியப்பு சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கப்பட்ட நிலையில் இந்த கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட கலாம் ஆராய்ச்சியாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
11
அன்டிகைதிரா மேற்கொண்டு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அன்டிகைதிரா இயந்திரநுட்பமுறையானது ஏதென்ஸ் நாட்டு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
12

Post a Comment

0 Comments