தற்கொலை எண்ணமா? உதவ முன்வருகிறது Facebook!

தற்கொலை எண்ணம் மேலிடுபவர்களுக்கு உதவும் வகையில், Facebook தற்கொலை தடுப்புக் கருவியை உலகம் முழுமைக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் Facebook வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தற்கொலைத் தடுப்புக் கருவி அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும். ஃபோர் ப்ரண்ட், லைஃப்லைன், save.org போன்ற அமைப்புகளின் உதவியுடன் இந்த கருவியை உருவாக்கியுள்ளது ஃபேஸ்புக்.

எவரேனும் ஒரு துன்பத்துக்குரிய சூழலை எதிர்கொள்ளும் வகையிலோ, தற்கொலை எண்ணம் கொண்டிருக்கும் வகையிலோ பதிவுகளை போஸ்ட் செய்திருந்தால், அவருடைய நண்பர் அல்லது இந்த இடுகையைப் பார்ப்பவர்கள் இந்த கருவிக்கு தெரியப்படுத்தலாம்.

அவர்களுக்கான உளவியல் குறிப்புகள், உதவிகள், நண்பர்களுடன் இணைப்பது, போன்ற பல வகையான உதவிகளைச் செய்வதற்காக facebook குழுக்களை அமைத்துள்ளது.

Post a Comment

0 Comments