ஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.??

மொபைல் தொலைத்தொடர்பு முறை துவங்கிய காலகட்டத்தில் ஒட்டு மொத்த உலகெங்கும் தன் கருவிகளின் மூலம் வலம் வந்த நிறுவனம் தான் நோக்கியா. துவக்கக் காலத்தில் சந்தையை ஆட்டிப்படைத்த நிறுவனம் சில காலமாக இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் பின் தங்கிய நிலையில் தான் இருக்கின்றது.
 
பின் பல்வேறு இடர்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் வசம் சென்று இன்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் வசம் இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இதனை நிரூபிக்கும் வகையில் நோக்கியாவின் புதிய ஆணட்ராய்டு கருவி குறித்த சில தகவல்கள் கருவியின் அட்டகாசமான புகைப்படங்களோடு கசிந்திருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளைத் தயாரிக்க நோக்கியா நிறுவனம் மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நோக்கியா நிறுவனம் என்1 (N1) என்ற டேப்ளெட் கருவியைத் தயாரிக்க மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா நிறுவனம் எச்எம்டி குளோபல் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நோக்கியா பிரான்டு மூலம் கருவிகளின் விற்பனைக்கு எச்எம்டி மூலம் ராயல்டி பேமென்ட்களைப் பெறும்.
நோக்கியா பிரான்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நோக்கியா பி1 (P1) என அழைக்கப்படலாம் என்றும் இந்தக் கருவியானது இன்ஃபோகஸ் / ஷார்ப் பொறியாளர்கள் மூலம் தயாரித்தப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஷார்ப் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வெளியான தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

வெளியான புகைப்படங்களில் புதிய கருவியானது ஷார்ப் அக்வோஸ் பி1 என அழைக்கப்படலாம் எனத் தெரிகின்றது. குறைந்த அளவு கருவிகள் விநியோகம் செய்யப்பட இருக்கும் இந்தக் கருவி நிச்சயம் நோக்கியா கருவியாகவே இருக்க வேண்டும்.

நோக்கியா பி1 கருவியில் 5.3 இன்ச் FHD 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்படலாம்.

நோக்கியா பி1 கருவியில் 22.6 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமாகச் சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்படலாம். இதோடு ஐபி58 (IP58) சான்று பெற்றிருக்கும் என்பதால் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகின்றது.

முன்னதாக நோக்கியா சி1 என்ற பெயரில் நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கருவியானது ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டன.

நோக்கியா சி1 கருவியில் 5 இன்ச் எச்டி திரை மற்றும் 720 பிக்சல் ரெசல்யூஷன், 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments