இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ்.!

மோட்டோரோலா இறுதியாக அதன் மோட்டோ இ4 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களை 13-ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த மோட்டோ இ தொடர் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது, குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ் இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டாகிற்று. மோட்டோ இ4 ஆனது சுமார் ரூ.8,380/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது மறுகையில் உள்ள மோட்டோ இ4 பிளஸ் ஆனது சுமார் ரூ.11,605/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மோட்டோ இ4 பிளஸ் ஆனது அயர்ன் கிரே மற்றும் ஃபைன் கோல்ட் நிறங்களில் வரும் போது மறுபக்கம் மோட்டோ இ4 ஆனது லைகோரைஸ் பிளாக் மற்றும் ஃபைன் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

கைரேகை சென்சார் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சமாக சில சுவாரஸ்யமான பேட்டரி காப்பு உள்ளது. மிகவும் மலிவு விலை டேக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே உலோக பாடி, நீர்த்தேக்க நானோகோடிட்டிங், ஹோம் பொத்தானில் உள்ளே உட்பொதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 (நௌவ்கட்) இயக்க முறைமை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.


மோட்டோ இ4 பிளஸ் மோட்டோ இ4 பிளஸ் ஆனது ஒரு 5.5 அங்குல (1280 x 720 பிக்ஸல்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் அட்ரெனோ 308 ஜிபியூ உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2ஜிபி ரேம் ரேம் மற்றும் 16ஜிபி/ 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது, மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

பின்புற கேமரா கேமரா துறையில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.


ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரிக்கிறது. அளவீட்டில் இது 155x 77.5x 9.5 மிமீ மற்றும் 182 கிராம் எடையும் கொண்டுள்ளது.


மோட்டோ இ4 சிறிய மாறுபாடான மோட்டோ இ4, ஒரு 5 அங்குல (1280 x 720 பிக்சல்கள்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி 70% என்டிஎஸ்சி (NTSC) வண்ண வரம்பு புல் லேமினேஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விஸ்தரிக்கக்கூடிய நினைவக விருப்பத்துடன் அட்ரெனோ 308 ஜிபியூ உடன் 4.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி மூலம் இயக்கப்படுகிறது.


பேட்டரி கேமரா துறையில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.2 கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.


இணைப்பு ஆதரவு இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய 2080எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரிக்கிறது. அளவீட்டில் இது 144.5x 72x 9.3 மிமீ மற்றும் 150 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments