இணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால்

இணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால், அந்நாளில் மட்டும் என்னென்னவெல்லாம் நடக்கின்றனவென பாருங்கள். ஒருநாள் மட்டும் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் எண்ணிக்கை 210 பில்லியன்களாம். இது அமெரிக்க தபால்துறையானது ஒருவருடம் முழுவதும் கையாளும் தபால்களின் எண்ணிக்கை. ஃபிளிக்கரில் ஒருநாள் மட்டும் 3 மில்லியன் போட்டோக்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன. இது கொண்டு 375,000 பக்கங்கள் கொண்ட போட்டோ ஆல்பத்தை நிரப்பலாமாம். செல்போன்கள் தங்களுக்குள்ளே தினமும் 43,339,547 கிகாபைட்டுகள் அளவு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. இத்தகவல்களை சேமிக்க நாம் முனைந்தால் அதற்கு 9.2 மில்லியன் டிவிடிக்கள் தேவைப்படும். தினம் தினம் 700,000 புதிய நபர்கள் பேஸ்புக்கில் சேருகின்றார்கள். அது கயானா நாட்டின் மக்கள்தொகைக்கு சமானம். ஒருநாள் மட்டும் 900,000 பதிவுகள் வலைப்பதிவுகளில் எழுதப்படுகின்றன. இது கொண்டு 19 வருடகால நியூயார்க் டைம்ஸ் நாளிதழை நிறைக்கலாமாம். இப்படி இணையம் இவ்ளோ பெரிசாக இருக்கின்றது.

Post a Comment

0 Comments