காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐரோப்பாவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு எஸ்-மேக்ஸ் காரில் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இன்டலிஜென்ட் ஸ்பீடு மீட்டர் என்று அழைக்கப்படும் புதிய அம்சமானது இரு நேசன்ட் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பங்களான ஸ்பீடு லிமிட்டர் மற்றும் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன்களை கொண்டுள்ளது. 
 
காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன் தொழில்நுட்பத்தில் காரின் முன்பக்கத்தில் கேமராவும் பின்புறம் ஒரு கேமரவும் கணினியுடன் இணைக்கப்பட்டு முக்கிய குறியீடுகளை பதிவு செய்யும். கடந்த சில ஆண்டுகளாக சில கார்களில் குறியீடுகளை கவனித்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை டிஜிட்டல் டேஷ்போர்டில் காண்பிக்கும். இங்கு, ஃபோர்டு நிறுவனம் இரு தொழில்நுட்பங்களையும் இணைத்து வேக குறியீடுகளை பார்த்து தானாக காரின் வேகத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments