டிவியை க்ரோம் கம்ப்யூட்டராக மாற்றும் கூகுள் க்ரோம்பிட் !!!


கூகுள் நிறுவனம் புதிய க்ரோம் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. இது க்ரோம் இயங்குதளம் கொண்ட டாங்கிள் என்பதோடு இதில் க்ரோம்புக்கில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி தற்சமயம் $100 குறைவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதை கொண்டு தொலைகாட்சி பெட்டியை லாப்டாப் அல்லது க்ரோம் கம்ப்யூட்டராக மாற்ற முடியும்.

இது குறித்து க்ரோம் ப்ளாகில் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது, பார்க்க மிட்டாயை விட சிறியதாக இருக்கின்றது, ஆனாலும் $100 விலையில் க்ரோம்பிட் கம்ப்யூட்டர் போன்றதாகும். எந்த டிஸ்ப்ளேவில் இதை இணைத்தாலும் அது கம்ப்யூட்டராக மாறி விடும். பள்ளி மற்றும் வியாபார பயன்பாட்டிற்கு இது உகந்ததாக இருக்கும்.

க்ரோம்பிட் ஐபோன் 6 விட சிறியதாக இருக்கின்றதோடு இந்தாண்டின் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த கருவி சாம்பல், நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments