மொபைல் ஆப் மூலம் விமான டிக்கெட் - இந்திய ரயில்வே வெளியிட்டது.!!

 
 
இந்திய ரயில்வே துறை விமானப் பயணச்சீட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்திட மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் அதிவேகமாகவும், குறைந்த செலவிலும் விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திட முடியும். 
 
இதற்குப் பயனர்கள் IRCTC ஆண்ட்ராய்டு சார்ந்த செயலியான IRCTC Air என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்திட வேண்டும். இந்தச் செயலியின் மூலம் முன்பதிவு செய்வது சில கிளிக்'களில் நிறைவடையும்.

1.பதிவு தகவல்கள் IRCTC சேவையில் ஏற்கனவே பதிவு செய்த குறியீடு (லாக் இன் ஐடி) மற்றும் கடவுச்சொல் பயன்படுத்த முடியும். விமானப் பயணச்சீட்டுகளுக்கெனத் தனியே குறியீடு உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை

2.குறைந்த விலை IRCTC உருவாக்கியிருக்கும் இந்த இன்-ஹவுஸ் ஆப் மூலம் இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கும் பயணம் செய்ய விமான பயணச்சீட்டுகளை குறைந்த விலையில் முன்பதிவு செய்திட முடியும்.

3.பிஎன்ஆர் நெட் பேங்கிங் மூலம் ஒரு பிஎன்ஆர் கொண்டு அதிகபட்சம் 9 பேர் பயணம் செய்யப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஒரு பிஎன்ஆர் கட்டணம் ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

4.கட்டணம் இதன் மூலம் IRCTC செயலி குறைந்த கட்டணம் வழங்குவதோடு எவ்வித செயலாக்க கட்டணமும் விதிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் ரூ.150-250 வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கின்றன.

5.பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் கட்டணமும் IRCTC செயலியில் குறைவு தான். மேலும் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் போது மொத்த கட்டணத்தில் 1.8% செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இது மற்றவற்றை விடக் குறைவு தான்.

6.பயணச்சீட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணச்சீட்டுகளை லோ காஸ்ட் கரியர் (low cost carriers) மற்றும் ஃபுல் காஸ்ட் கரியர்களிலும் (full service carriers) முன்பதிவு செய்திட முடியும். மேலும் ரத்துச் செய்யப்பட்ட பயணனச்சீட்டுக்கான கட்டணமும் 30 நாட்களுக்குள் திரும்ப வழங்கப்பட்டு விடும்.

7.இந்த ஆப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர் ஏற்கனவே மேற்கொண்ட விமான தேடல் குறித்த தரவுகள் பதிவாகியிருப்பதோடு இவை எளிமையாகத் திரும்ப பெற முடியும்.

8.IRCTC ஆப் மூலம் கட்டணம் செலுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் LTC விமானப் பயணச்சீட்டுகள் மூலம் விடுமுறை நாட்களிலும் முன்பதிவு செய்ய முடியும்.

9.இந்தச் செயலியை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிமையானதோடு, இன்ஸ்டால் செய்ததும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் துவங்கலாம். மேலும் 24/7 வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படுகின்றது.

10.இந்த செயலியை பதிவிறக்கம் செய்திட இங்கு க்ளிக் செய்யவும்.


Post a Comment

0 Comments