பிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi 9!



சியோமி Mi 9 போன்கள் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 20 ஆம் தேதி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சியோமி Mi 9 போனின் அறிமுக நிகழ்வு நடைபெறுகிறது. இதே நாளில்தான் சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனின் அறிமுக நிகழ்வு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது. 

சியோமி நிறுவனம் தனது Mi 9 போன்களை பிப்ரவரி 24 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இதுவரை சியோமி Mi 9 போன்களின் பிரத்யேக அம்சங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி இருப்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 

சியோமி Mi 9 போன்கள் 6.4 இஞ்ச் முழு திரை (edge-to-edge screen), 24w வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, மூன்று கேமிராக்கள், 3500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

Post a Comment

0 Comments