ஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்து 7 கோடி ரூபாய் சுட்ட வங்கி ஊழியர்!



சீனாவில் ஏடிஎம் இயந்திரத்தைக் ஹேக் செய்த ஆசாமி சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை அபேஸ் செய்துள்ளார். 

சீனாவில் உள்ள ஒரு வங்கியில் (Huaxia Bank) கடந்த 2016ஆம் ஆண்டு வங்கியின் தொழில்நுட்பத் தளத்தில் ஒரு குறைபாடு கண்டறியப்பட்டது. அதாவது நள்ளிரவில் அந்த வங்கியின் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது எதுவும் பதிவு செய்யப்படாது. 

இந்தக் குறைபாட்டை சரிசெய்ய 43 வயதான குயின் குய்ஷெங் என்பவர் வங்கியின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியுள்ளார். அப்போது, தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கி ஏ.டி.எம். மூலம் திருட்டுத்தனமாக பணம் எடுத்துள்ளார். 

இந்தத் தில்லுமுல்லு வேலையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, வங்கி அலாரம் செயலிழந்து போக வைத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் எடுத்த தொகையில் ஒரு பகுதியை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார்.


இந்த மூதலீட்டினால் அவர் சிக்கிக்கொண்டுவிட்டார். அவர் செய்த டூபாக்கூர் வேலை அனைத்தும் அம்பமாகிவிட்டது. அவர் சுட்ட பணம் இந்திய மதிப்பில் சுமார் 7,11,75,500 ரூபாய் இருக்கும். 

தற்போது அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளே தள்ளியிருக்கிறது. 

Post a Comment

0 Comments