மறைமுக வரி என்றால் என்ன? எது எது மறைமுக வரி?



இந்திய அரசால் பொருட்கள் வாங்கும்போது இரண்டு வகையான வரிகள் விதிக்கப்படுகிறது. ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. மறைமுக வரி என்பது பொருள் தயாரிப்பவர்கள் மற்றும் வணிகர்களால் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். 

மறைமுக வரி என்றால் என்ன? 

நேர்முக வரி என்பது வருமான வரி மீது சுமத்தப்படும் வரி. இது நேரடியாக அறிவிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மறைமுக வரி. பொருட்கள் தயாரிப்பவர், வணிகர் என்று அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை, கூடுதல் வரியை, கூடுதல் செலவினங்களை சமாளிக்க பொருட்கள் மீது வரியை அதிகரித்து விடுகின்றனர். இறுதியில் பொருட்களை வாங்கும் தனி நபர் மீது அந்த வரி சுமத்தப்படுகிறது. பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலையில் நுகர்வோர் இருப்பர். இது மறைமுக வரி எனப்படுகிறது. 

சில சமயங்களில் மறைமுக வரி இன்வாய்சில் கூறப்பட்டு இருக்கும். சில பொருட்களில் கூறப்படாமல் பொருளின் மீதே சுமத்தப்பட்டு இருக்கும். மறைமுக வரியினால்தான் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. 



மறைமுக வரிகள் என்னென்ன? 

சேவை வரி, சுங்கவரி, கலால் வரி, மதிப்புக்கூட்டு வரி, பொழுதுபோக்கு வரி, நவநாகரீகப் பொருட்கள் மீதான வரி ஆகியைவை மறைமுக வரிகளின் கீழ் வரும்.

மறைமுக வரியும், விளக்கங்களும்: 

சேவைகளின் மீது விதிக்கப்படுவது சேவை வரி. உணவகங்களில் உணவு அருந்தும்போது அல்லது ஓட்டல்களில் தங்கும்போது நம் மீது விதிக்கப்படுவது சேவை வரி. கலால் வரி என்பது தயாரிப்பு பொருட்களின் மீது விதிக்கப்படுவது. சுங்கவரி என்பது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படுவது. மதிப்புக் கூட்டு வரி என்பது தயாரிப்பு, விநியோகம் என அனைத்து மட்டங்களிலும் நுகர்வோரை பொருள் வந்தடையும் வரை விதிக்கப்படுவது. இது மட்டுமின்றி, இந்திய பங்குச் சந்தையில் வாங்கப்படும் பங்குகளின் மீது, மியூச்சுவல் பண்டுகளின் மீது விதிக்கப்படும் வரியாகும். 

ஸ்டாம்ப் வரி: 

இது தவிர மாநில அரசு அந்தந்த மாநிலங்களில் இருக்கும் அசையா சொத்தின் மீது ஸ்டாம்ப் வரி விதிக்கிறது. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். 

பொழுதுபோக்கு வரி: 

இவை தவிர பொழுதுபோக்கு வரியும் விதிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பொருட்காட்சிகள், வீடியோ விளையாட்டுக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மீது விதிக்கப்படுவதாகும். தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டியும் ஒரு வகையில் மறைமுக வரிதான். இந்த வரியால் தான் நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 

Post a Comment

0 Comments