விவோ நிறுவனம் 48 எம்பி கேமரா, 6ஜிபி ரேம் வசதியுடன் கூடிய விவோ வி15 ப்ரோஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி சீன நிறுவனமான விவோ, வரும் 20ம் தேதி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இது தொடர்பான டீசர் வீடியோவை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பிக்கு என்று பிரத்யேகமாக பாப்-அப் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போல் பாப்-அப் கேமரா ஸ்மார்ட்போன் வெளிவந்தாலும், விவோ வி15 ப்ரோவில் உள்ள பாப்-அப் கேமரா அதிக மெகா பிக்சல் கொண்டதாகவும். உலகில் முதன்முறையாக 32 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விவோ வி15 ப்ரோ தான்.
இது தவிர போனின் பின்புறத்தில் 45 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. இதில் 12 எம்பி சென்சார் நுட்பமும் உள்ளது. மேலும், விரல் ரேகை சென்சார், ஜிபிஎஸ், நேவிகேஷன் சென்சார் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் 20ம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில், இதன் விலை 25,990 ரூபாய் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ 15 ப்ரோவில் உள்ள சிறப்பம்சங்கள்:
சிம்: டூயல் சிம் கார்டுகள்
ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ
பிராசசர்: குவால்கம் ஸ்னாப்டிராகன் 660
டிஸ்ப்ளே அளவு: 6.41 இன்ச்
ரேம்: 6 ஜிபி
இன்பீல்ட் மெமரி: 128 ஜிபி
கேமரா: மூன்று கேமரா
முன்புற கேமரா: 12 மெகா பிக்சல்
பின்புற கேமரா: 45 மெகா பிக்சல்
பாப் அப் கேமரா: 32 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 3400mAh
0 Comments