Sep 6, 2010

எக்ஸெல் புதிய டிப்ஸ்கள்

எக்ஸெல் தொகுப்பு பலரின் மூன்றாவது கையாக
இயங்குகிறது. தங்களின் அனைத்து வேலைகளையும் எக்ஸெல்
தொகுப்பிலேயே மேற்கொள்வதாகவும் எனவே அது குறித்த
டிப்ஸ்களைத் தொடர்ந்து வெளியிடுமாறு பல வாசகர்கள்
தினமலர் அலுவலகத்திற்கு தொலை பேசியில் கேட்டுக்
கொண்டுள்ளனர். இங்கு இதுவரை கண்டறியாத பல டிப்ஸ்கள்
வழங்கப் பட்டுள்ளன.


* எக்ஸெல் தேதிகளையும் நேரத்தினையும் எண்களாகத்தான்
கையாள்கிறது. அந்த எண்கள் 1 முதல் 2958465 வரை ஆகும். 1
என்பது ஜனவரி1, 1900 ஐயும் 2958465 டிசம்பர் 31, 9999 ஐயும்
குறிக்கின்றன. ஒரு தேதியின் சீரியல் எண்ணைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா? தேதியை எக்ஸெல் ஏற்றுக் கொள்கிறபடி
அமைத்துவிட்டு பின் கர்சரை அங்கு கொண்டு சென்று பின் என்ற
Ctrl+‘
கீகளை (இரண்டாவது சொல்
லப்படும் கீ, எண் 1க்கு முன்னால் உள்ள கீ) அழுத்தவும்.


எந்த மாற்றமும் தெரியவில்லையா? இப்போது கர்சரை வேறு எந்த
செல்லுக்காவது கொண்டு செல்லுங்கள். உடனே தேதியின் சீரியல்
எண் என்னவென்று காட்டப்படும்.
=TODAY()
என்ற பார்முலாவினைக் கொடுத்தால்
அன்றைய தேதி செல்லில் கிடைக்கும். பின் இந்த தேதியை அதன்
சீரியல் எண்ணாக மாற்ற Ctrl+‘ கீகளை அழுத்துங்கள்.

* நீங்கள் தேதியை எழுதுகையில் சிறிய கோட்டினைப்
பயன்படுத்தாமல், நாள், மாதம் மற்றும் ஆண்டுக்கு இடையே
புள்ளி வைத்து எழுதுவீர்களா? எக்ஸெல் உங்கள் விருப்பப் படி
புள்ளி வைத்து எழுத கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும்.
ஸ்டார்ட் பட்டனிலிருந்து Start, Settings, Control Panel, Regional Optionsஎனச் செல்லவும். அங்கு Date என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு
தேதியைப் பிரித்து எழுதும் பாக்ஸில் (Date separator box) ஸ்லாஷ் கோடு (/)
இருக்கும். அதனை எடுத்துவிட்டு புள்ளியை வைக்கவும்.
அதன்பின் Apply கிளிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும்.


* எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் அதிகம் பயன்படுத்துகிறீர்களா?
நீளமாக நான்கு அல்லது ஐந்து சொற்கள் வர வேண்டுமானால் ஒரு
செல்லில் அமைத்துவிடுவீர்கள். ஆனால் பல சொற்களை வெவ்வேறு
செல்களில் அமைத்து இவற்றை பல வகைகளாக வேறு செல்களில்
அமைக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? எடுத்துக்
காட்டாக கணக்கு, இயற்பியல், வேதியியல், சாப்பாடு, அவனுக்கு,
அவளுக்கு, கண்ணனுக்கு,பிடிக்கும், பிடிக்காது,
மற்றும் எனப் பல சொற்கøளைக் கொண்டு வெவ்வேறு வாக்கியங்களை
அமைக்கலாம். எக்ஸெல்லில் இவற்றை தனித்தனியாக அமைத்து
தேவைப்படும் செல்களில் தேவைப்படும் டேட்டாக்களை எப்படி
இணைப்பது என்று பார்ப்போம்.

இதற்கு நமக்குக் கை கொடுக்கும் அடையாளம் - சிம்பலாகும். இதனை ஆங்கிலத்தில் Ampersand எனச் சொல்வார்கள். இங்கு
எடுத்துக்காட்டுக்களை ஆங்கிலத்தில் தருகிறேன். A1 செல்லில் F1என டைப் செய்திடவும். A2 செல்லில் Get the Most out of Excel! என டைப் செய்திடவும். A3 செல்லில் The Ultimate Excel Tip Help Guide என டைப் செய்திடவும். அ5 செல்லில் =A1&” “&A2&” “&A3 என பார்முலாவினை
அமைக்கவும். இப்போது செல்லில் முதலில் கூறிய மூன்று
செல்களில் உள்ள சொற்கள் தொடர்ச்சியாக அமைக்கப் படுவதனைப்
பார்க்கலாம். இது போல வெவ்வேறு செல்களில் வெவ்வேறு சொற்களை
அமைத்து தேவைப்படும் செல்களில் இவற்றை இணைக்கலாம்.

* திறந்திருக்கும் அனைத்து ஒர்க்புக்குகளையும் எக்ஸெல் தொகுப்பை மூடாமல் ஒரே ஷாட்டில் மூட Shift கீயை அழுத்திக் கொண்டு பின் File
மெனுவில் Close All பிரிவில் கிளிக் செய்திடவும்.


* குறிப்பிட்ட செல் அல்லது அந்த செல் உள்ள வரிசையையே
மறைத்திட அதனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Ctrl+0 அழுத்தவும். செல் / செல்கள் மறைந்துவிடும். இவற்றைத் திரும்பப் பெற Ctrl+Shift+0 அழுத்தவும்.


* எண்ட் கீயை அழுத்தி உடனே ஹோம் கீயையும் அழுத்தினால் ஒர்க்
ஷீட்டில் நீங்கள் பயன்படுத்திய ஒர்க் ஷீட்டின் கீழாக வலது
ஓரத்தில் உள்ள மூலைக்குச் செல்வீர்கள்.


* ஒரு படுக்கை வரிசை / வரிசைகளை இடைச் செருக செல் அல்லது
செல்களைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + ப்ளஸ் கீ (+)
அழுத்தவும். இவற்றை நீக்க கண்ட்ரோல் + மைனஸ் கீ (–)
அழுத்தவும்.


* ஒரு பங்ஷன் எழுதி Ctrl+ A கீகளை அழுத்தினால் உடனே பங்ஷன் ஆர்க்யுமென்ட்ஸ் விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக
=SUM
என டைப் செய்து Ctrl+ A அழுத்தினால் பங்சன்
ஆர்க்யுமென்ட்ஸ் விண்டோ திறக்கப்படும்.


* காப்பி செய்த பின் பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தலாம்.
வழக்கம்போல் கண்ட்ரோல் + வி (Ctrl+V)கீகளை பல இடங்களில் பேஸ்ட் செய்திட பயன்படுத்த
வேண்டும்.


* கிரிட்லைன்களை மட்டும் வண்ணம் மாற்றி அமைக்கலாம். இதற்கு
முதலில் Tools மெனுவினைத் தேர்ந்தெடுங்கள். அதில் Options என்னும் பிரிவில் கிளிக் செய்திடுக. கிடைக்கும் விண்டோவில் Viewடேப் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் Window options பிரிவில்
Gridlines color
என்னும் கீழ் விரியும் பாக்ஸில் தேவையான கலரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


* டேட்டா தேடுவதற்கு கண்ட்ரோல் + எப்; டேட்டா

0 கருத்துக்கள்:

Post a Comment