தமிழ் கணினி

தமிழ் கணினி

உங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...

Breaking

Sep 19, 2018

Truecaller Pro v9.18.7 Cracked APK + Mod Lite is Here ! [Latest]

5:06 PM 0
Truecaller Pro v9.18.7 Cracked APK + Mod Lite is Here ! [Latest]

Truecaller Premium APK

Truecaller Pro

Truecaller is the only dialer you’ll ever need with the ability to identify unknown callers and block unwanted calls. See names and photos of people who call, even if they aren’t saved in your phonebook. And know when friends are free to talk, making your calling experience smarter and more delightful. With a community-based spam list of over 200 million users and is the only dialer you’ll ever need.
Features:
 • Always see who’s calling — works for saved contacts and unknown numbers
 • Block spam callers and telemarketers
 • Search for any name or number
 • Make calls directly from the app
 • No more unknown numbers in your call history
 • See when your friends are free to talk
 • Copy a number anywhere (e.g. website or apps) and Truecaller will tell you who it belongs to
MOD Lite
Based on PRO version;
Optimized graphics and cleaned resources for fast load < improved result (15.5 MB total apk size);
Analytics Disabled;
Location Maps works;
Drive backup works;
All ads and services calls from activity removed;
Languages: En, Ru.

How to Install Truecaller Pro APK?

 • Download the APK from below links and Install on your Device.
 • Do not install over old, only clean install!
Fix Caller ID for Samsung just go to your phone settings – > Battery > Details > Find Truecaller > Turn off optimization.

VideoShow Premium – Video Editor v8.0.9rc MOD APK [Latest]

4:59 PM 0
VideoShow Premium – Video Editor v8.0.9rc MOD APK [Latest]

VideoShow

VideoShow Premium Video Editor

Videoshow remove the watermark permanently. You own your video, fully enjoy yourself. VideoShow bring excellent video editing experience to you. With minimum operations, you can make awesome video with photos and videos. Best of all, it’s completely free video editor app, no ads!
 • The best and All-in-One video editor for Android
 • The most powerful video joiner, mix video and photo together
Features:
 • Intergrated video editor enviroment, What you see, is what you get!
 • (New!) Make video with photos! Mix video and photo together!
 • You can add text to video. Multiple text can be added on your video, Adjust it with accurate timing, various colors.
 • Add beautiful effects to your videos, Now five video filters supported, They are Georgia, Sepia, Recho, Sahara, Polaroid.
 • Add music, Trim it, instant preview with video
 • Trim your videos
 • Merge your videos. Different format videos can be merged
 • Export videos in two modes: Keep Video Quality/Compressed Quality.
 • Share your videos to youtube, facebook & twitter
MOD Premium
 • Premium features Unlocked;
 • Ads Removed;
 • Sponsored banner layout removed;
 • All ads calls from Activity removed;
 • Analytics disabled;
 • No watermark unlocked;
 • Export HD Mode unlocked;
 • Export in Animated GIF unlocked;
 • Pro Materials stuff unlocked.


Jun 24, 2017

இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ்.!

1:23 PM 0
இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ்.!
மோட்டோரோலா இறுதியாக அதன் மோட்டோ இ4 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களை 13-ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த மோட்டோ இ தொடர் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது, குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ் இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டாகிற்று. மோட்டோ இ4 ஆனது சுமார் ரூ.8,380/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது மறுகையில் உள்ள மோட்டோ இ4 பிளஸ் ஆனது சுமார் ரூ.11,605/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மோட்டோ இ4 பிளஸ் ஆனது அயர்ன் கிரே மற்றும் ஃபைன் கோல்ட் நிறங்களில் வரும் போது மறுபக்கம் மோட்டோ இ4 ஆனது லைகோரைஸ் பிளாக் மற்றும் ஃபைன் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

கைரேகை சென்சார் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சமாக சில சுவாரஸ்யமான பேட்டரி காப்பு உள்ளது. மிகவும் மலிவு விலை டேக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே உலோக பாடி, நீர்த்தேக்க நானோகோடிட்டிங், ஹோம் பொத்தானில் உள்ளே உட்பொதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 (நௌவ்கட்) இயக்க முறைமை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.


மோட்டோ இ4 பிளஸ் மோட்டோ இ4 பிளஸ் ஆனது ஒரு 5.5 அங்குல (1280 x 720 பிக்ஸல்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் அட்ரெனோ 308 ஜிபியூ உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2ஜிபி ரேம் ரேம் மற்றும் 16ஜிபி/ 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது, மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

பின்புற கேமரா கேமரா துறையில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.


ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரிக்கிறது. அளவீட்டில் இது 155x 77.5x 9.5 மிமீ மற்றும் 182 கிராம் எடையும் கொண்டுள்ளது.


மோட்டோ இ4 சிறிய மாறுபாடான மோட்டோ இ4, ஒரு 5 அங்குல (1280 x 720 பிக்சல்கள்) எச்டி 2.5டி வளைந்த கண்ணாடி 70% என்டிஎஸ்சி (NTSC) வண்ண வரம்பு புல் லேமினேஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விஸ்தரிக்கக்கூடிய நினைவக விருப்பத்துடன் அட்ரெனோ 308 ஜிபியூ உடன் 4.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி மூலம் இயக்கப்படுகிறது.


பேட்டரி கேமரா துறையில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.2 கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.


இணைப்பு ஆதரவு இந்த தொலைபேசி சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு ஈர்க்கக்கூடிய 2080எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரிக்கிறது. அளவீட்டில் இது 144.5x 72x 9.3 மிமீ மற்றும் 150 கிராம் எடையும் கொண்டுள்ளது.

அட்டகாசமான மீஸூ புரோ 7 ஸ்மார்ட்போன் ஜூலை 26-ல் அறிமுகம்.!

1:13 PM 0
அட்டகாசமான மீஸூ புரோ 7 ஸ்மார்ட்போன் ஜூலை 26-ல் அறிமுகம்.!
2016ஆம் ஆண்டு ஒப்பிடும்போது, மீஸூ அதிக ஸ்மார்ட்போன்களை வெளியிடவில்லை, தற்போது அந்நிறுவனம் இந்த ஆண்டு பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் வருகின்ற ஜூலை மாதம் 26ஆம் தேதி, புதிய மீஸூ புரோ 7 என்ற மாடலை அறிமுகப்படுத்தும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


1080 வீடியோபிக்சல் : 

இக்கருவி 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 1080 வீடியோபிக்சல் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு திறன்: 

இந்தக்கருவி 4/6ஜிபி ரேம் அமைப்புகளை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஹீலியோ எக்ஸ்30; 

மீஸூ புரோ 7 பொறுத்தமட்டில் டெகா-கோர் மீடியா டெக் ஹீலியோ எக்ஸ்30 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்: 

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ்இயுஎஸ்பி-2.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி: 

மீஸூ புரோ 7 பொருத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரமலான் ஸ்பெஷல் : பிஎஸ்என்எல்-ன் ரூ.786/- மற்றும் 599/- காம்போ திட்டங்கள்.!

1:08 PM 0
ரமலான் ஸ்பெஷல் : பிஎஸ்என்எல்-ன் ரூ.786/- மற்றும் 599/- காம்போ திட்டங்கள்.!
அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இரண்டு புதிய காம்போ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 786 மற்றும் ரூ.599/- என்ற இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

சில கூடுதல் சலுகைகளுடன் இந்தக் தொகுப்புகளின் மேல் இன்னும் சுவாரஸ்யமான முழுமையான பேச்சுப் நேரம் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பேக்களின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ரூ.786/- பேக்

ரூ.786/- பேக் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் 90 நாட்களுக்கு ரூ.786/- என்ற பேலன்ஸ் உடன் 3ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இருப்பினும், இந்த தா திட்டத்தில் குரல் அழைப்புகளுக்கு மட்டுமே பேலன்ஸை பயன்படுத்தப்படலாம்.

எஸ்எம்எஸ்

அதாவது தொகுக்கப்பட்ட தரவு முடிந்ததும் பயனர்கள் இந்த பேலன்ஸை எஸ்எம்எஸ் அனுப்ப அல்லது தரவுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது என்று அர்த்தம்.

ரூ.599/-க்கு

மறுபக்கம், ரூ.599/-க்கு திட்டத்தில் 507 மெயின் பேலன்ஸ் மற்றும் கூடுதலாக ரூ.279/- ஆனது பிரத்யேகமாக குரல் அழைப்புகளை வழங்குகிறது. மொத்தமாக ரூ.786/- திட்டம் 30-நாள் செல்லுபடியாகும் காலம் கொண்டது.

மட்டுமே பயனர்கள் 10 ஆன் நெட் எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். அதாவது இந்த செய்திகளை மற்ற பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மட்டுமே அனுப்ப முடியும். ரூ.786 போல இது எந்தவொரு தரவு நன்மையையும் வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் மதிப்பு 

பேச்சு நேரம் நன்மைகள் குறித்து பார்த்தல் பயனர்கள் 90 நாட்களுக்கு ரூ.786/- பேக்கின் கீழ் கூடுதல் மதிப்புகளை பெறுவர். அதாவது ரூ.110, ரூ.210 மற்றும் ரூ.290 ஆகிய ரீசார்ஜ்களை செய்தால், பயனர்கள் ரூ.115, ரூ.220 மற்றும் ரூ. 310/- பெறுவார்கள்.

20% கூடுதல் மதிப்பு


20% கூடுதல் மதிப்பு இதேபோல், ரூ.310, ரூ.510, ரூ.610 வரை ரூ.2,010/- ஆகிய ரீசார்ஜ் மதிப்புகளுக்கு 10 சதவீதம் கூடுதல் நன்மை பெறுவார்கள். மேலும், ரூ.3,100 மற்றும் ரூ.5,100/- ரீசார்ஜ் செய்ய பயனர்கள் 20% கூடுதல் மதிப்பு பெறுவார்கள்.

ரூ.5,990 விலையில் அட்காசமான சரிகமா கர்வான் ரேடியோ.!

1:02 PM 0
ரூ.5,990 விலையில் அட்காசமான சரிகமா கர்வான் ரேடியோ.!
சரிகமா கர்வான் ரேடியோ இந்தியாவில் 1970 மற்றும் 1980களில் தயாரிக்கப்பட்ட ரேடியோ போல் இவை தோன்றுகிறது. மேலும் இதன் முன்புறம் பெரிய மெட்டல் பொத்தான்கள் உள்ளன, இவை குறப்பிட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ரேடியோ பொறுத்தமட்டில் எந்த இணைய இணைப்பும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இதன் ஸ்பீக்கர் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சரிகமா கர்வான்:

இந்த ரேடியோ பொறுத்தமட்டில் பழையமாடல் போல் தோன்றும், ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளைகொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இவை பார்ப்பதற்க்கு சிறிய ரேடியோ போல தோன்றுகிறது, அதன்பின் பி&ஒ இன் ஏ3 நவீன தொழல்நுட்பம் கொண்டு இந்த ரேடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்:

இந்த ரேடியோ 1.5கிலோகிராம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொண்டுள்ளது, மேலும் 6வாட்ஸ் இதனுள் அடக்கம், மிகத்துள்ளியமான ஆடியோவை வழங்குகிறது இந்த ரேடியோ.

யுஎஸ்பி ப்ளேபேக்:

கர்வான் ரேடியோ பொறுத்தமட்டில் யுஎஸ்பி ப்ளேபேக், புளுடூத், எஃப்எம் ரேடியோ, பல்வேறு சிறப்பம்சங்களுடன்வெளிவருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெட்ஃபோன்:

இந்த ரேடியோ வலதுபுறத்தில் 3.5எம்எம் போர்ட் ஒன்று உள்ளது அவற்றில் ஹெட்ஃபோன்கள் இணைக்க வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் யுஎஸ்பி வழியில் சார்ஜிங் செய்யப்படும் வசதியும் உள்ளது.

விலை:

சரிகமா கர்வான் இதனுடைய விலை ரூ.5,990க்கு விற்பனை செய்யப்படுகிறது, பல்வேறு மக்கள் இந்த ரேடியோவை
வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

May 31, 2017

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

5:20 PM 0
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்
உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாம்பழத்தில் வைட்டமின் “ஏ’வும், வைட்டமின் “சி’யும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலுக்கு கிடைத்து விடும். பலர், மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல், தோல் பகுதியை எறிந்துவிடுகின்றனர். அதன் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் “சி’ சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, மாம்பழத்தில் அதிகமாக உள்ளன.

மாம்பழத்தில் “ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்’ எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன. அவை, இருதய நோய் வராமல் தடுக்கும் திறன் கொண்டவை. விரைவில் முதுமை தோற்றம் அடைவதையும் தடுக்கின்றன. மாம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு, பாதிப்பை குறைக்கும்; நல்ல பலனும் தரும். நாளொன்றுக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

வறண்ட தோல் சருமம் இருந்தாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார், 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். அஜீரண பிரச்னை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. மாம்பழம் பழுத்திருந்தால் மட்டுமே சாப்பிடலாம்; கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட் வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இதை உண்பதன் மூலம் இருதயம் வலிமை பெறும்; பசியை தூண்டுகிறது. உடல் தோல் நிறம் வளமை பெறுவதுடன், முகத்தில் பொலிவும் உண்டாகும்.

கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்ட மாம்பழம், கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றுக்கும் நல்ல பலன் தரும். மாம்பழச்சதையை மிக்சியில் இட்டு, சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி, கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பையும், தோல் நோய் தொல்லைகளையும் போக்கும்.

நோக்கியா 6, 5 மற்றும் 3 : தள்ளிப்போன இந்திய வெளியீடு, கூடவே இன்னொரு சிக்கல்.!

4:59 PM 0
நோக்கியா 6, 5 மற்றும் 3 : தள்ளிப்போன இந்திய வெளியீடு, கூடவே இன்னொரு சிக்கல்.!
இதையே தான் 7 மாசமா சொல்லிட்டு இருக்கீங்க ஆனா நோக்கியா போன் கைக்கு வந்த பாடில்லை என்று வாசகர்களே கடுப்பாகும் அளவு நோக்கியா சார்ந்த தகவல்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்று கூறுவதை விட, நோக்கியா நிறுவனம் மற்றும் அதன் கருவிகள் சார்ந்து தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் எங்களையும் சேர்த்தே கடுப்பாக்குகிறது என்று கூறினால் சற்று பொருத்தும். அதற்காக உங்களுக்கு தகவலை வழங்காமல் இருக்க முடியுமா.?? முடியாது அல்லவா.? ஆக, இதோ நோக்கியாவின் இந்திய வெளியீடு சார்ந்து வெளியான புதிய தகவல்கள், உங்களுக்காக.!

ஆன்லைனில் 
 
நோக்கியா 3310 (2017) கருவியானது இந்தியாவில் ரூ.3310/- என்ற விலை நிர்ணயத்தில் மே மாத மத்தியில் ஆன்லைனில் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும் வண்ணம் க்ரோமா வழியாக விற்பனையை தொடங்கியது. இதனை தொடர்ந்து நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.
 
நடுப்பகுதி 
 
நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது.

முதலில் கிடைக்கும் 
 
மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

உறுதி 
 
இதிலிருந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் 15-க்கு வெளியாகலாம். ஆக மொத்தம் ஜூன் முடிவில், மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையைத் தாக்கும் என்பது உறுதி.

நோக்கியா 6 அம்சங்கள் 
 
 - ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் - 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி செல்பீ கேமரா - 16எம்பி ரியர் கேமரா - கைரேகை சென்சார் - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் பேட்டரி - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
 
நோக்கியா 5 (அம்சங்கள்) 
 
- ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் - 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 13எம்பி பின்புற கேமரா - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் - ஓடிஜி ஆதரவு
 
நோக்கியா 3 அம்சங்கள் 
 
ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் - 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே - க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி ரியர் கிம் - 8எமி செல்பீ கேம் - ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் - ஓ.டி.ஜி. ஆதரவு - 4ஜி எல்டிஇ - 2650எம்ஏஎச் பேட்டரி

May 18, 2017

ஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்?

7:18 PM 0
ஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜியோ தற்போது பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது, அதற்க்குப் போட்டியாக ஐடியா பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டணகுறைப்பு போன்றவற்றை அறிவத்துவருகிறது, இதனால் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது ஐடியா,ஃப்ளிப் கார்ட் இணைந்து 30ஜிபி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது, இவை தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஐடியா ப்ரீபெய்ட்:

ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூபாய்.356 மற்றும் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச தரவுகளை பெறமுடியும் என மும்பையை சார்ந்த டெல்கோ ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐடியா வாடிக்கையாளர்கள்:

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா ஆபர்களை வழங்குகிறது என ஐடியா மற்றும் ஃப்ளிப் கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ரூபாய்.356 ரீசார்ஜ்:

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும், மேலும் தினசரி டேட்டா வரம்பில்லாமல், உபயோகப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய்.191 ரீசார்ஜ்: ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 10ஜிபி டேட்டாவை மட்டுமே பெறமுடியும்.

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

 டெல்கோவின் கருத்துப்படி லெனோவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் போன்ற 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமே இந்த ஆபர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Apr 27, 2017

வோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி?

10:13 PM 0
வோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி?
வோடபோன் அதன் பிரீமியம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளது. மேலும் ஜியோவின் பல சலுகைகளால் அதிகபாதிப்பு வோடபோன் நிறுவனத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4ஜி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது அந்நிறுவனம். தற்போது வோடபோன் நிறுவனம் பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 
வோடபோன் சிறப்பு: வோடபோன் உலகநாடுகள் முழுவதும் 200மில்லியன் வலுவான குடும்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க உள்ளது வோடபோன் நிறுவனம்.
 
வோடபோன் கால் அழைப்புகள்: வோடபோன் கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக அறிவித்துள்ளது.

வோடபோன் இலவச 4ஜி டேட்டா: தற்போது வோடபோன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்னவென்றால், 36ஜிபி 4ஜி டேட்டாவை இலவசமாக அறிவித்துள்ளது. மேலும் மாதம் 3ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். 12 மாதங்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஆபர் உள்ளது.
499 ரிசார்ஜ்: வோடபோன் பொருத்தமாட்டில் தற்போது 499 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 9ஜிபி மற்றும் அதனுடன் இலவசமாக கிடைக்கும் 3ஜிபி சேர்த்துப் பயன்படுத்தமுடியும்.

599 ரிசார்ஜ்: தற்போது 599 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5ஜிபி-9ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போது வோடபோன் இன்டர்நெட் வேகம் மிக அதிகமாக உள்ளது.