Copy - Paste வேலையை வேகமாக செய்ய

Copy - Paste என்ற வார்த்தைகளை கணிணி உபயோகம் செய்யும் அனைவரும் தினமும் கேட்கவும், செய்யவும் கூடிய ஒரு முக்கியமான செயல். நாம் நமது கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அல்லது pen Driveக்கு அல்லது நமது கணிணிக்குள்ளையே கோப்புகளை பறிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் தேர்ந்து எடுக்கும் முறை Copy - Paste. பல சமயங்களில் நாம் GB கணக்கிலான கோப்புகளை பறிமாற்றம் செய்யும் போது குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். உதாரணமாக Videos, software, Audios. அது மட்டும் அல்லாமல் அந்த சமயத்தில் நாம் கணிணியில் வேற செயல்களை செய்தல் கண்டிப்பாக கணிணி Hang ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இது எல்லாம் போதாது என்று, நாம் இவ்வளவு நேரம் காத்திருந்தும் நாம் பறிமாற்றம் செய்த கோப்புகள் பாதியில் நின்று விடலாம். எனவே இந்த பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தீர்க்க வந்த மென்பொருள் தான் Tera Copy.











இந்த மென்பொருள் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும் Copy - Paste வேலையை சில மணி துளிகளில் முடித்து விடுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த Copy - Paste வேலை முடியும் வரை நாம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமது கணிணியில் மற்ற வேலைகளை தடை இல்லாமல் செய்யலாம். நமக்கு இலவசமாக கிடைக்கும் இந்த Software கண்டிப்பாக நமது கணிணியில் இருக்க வேண்டியவை.













Click here to Download

Post a Comment

0 Comments