மொபைல் போனில் தேவையற்ற சந்தை அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி

மொபைல் போனில் தேவையற்ற சந்தை அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி
பிப்.1 முதல் "டிராய்' அதிரடி


Image

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) சார்பில், தொலைபேசி வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
"டிராய்' தலைவர் சர்மா, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலான இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை, நாட்டில் ஆறு முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டோம். ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் முடிந்துள்ள நிலையில், சென்னையில் இன்று (நேற்று) நடக்கிறது.தொலைபேசி சேவை தொடர்பான குறைகள் குறித்து, வாடிக்கையாளர்கள் கால் சென்டர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வசதியுள்ளது.இதில், வாடிக்கையாளர்கள் முழுமையாக பயன்பெற முடியாததால், தொலைபேசி நிறுவனத்தை சேர்ந்தவர், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர், பல்துறை வல்லுனர் ஆகிய மூவர் அடங்கிய குழுவை, வட்டார அளவில் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.பழைய தொலைபேசி எண்ணை மாற்றாமல், மொபைல் போன் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் திட்டம், கடந்த ஒரு மாத காலமாக அரியானா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக, ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பதிவு செய்ததில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் பழைய எண்ணிலே நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொண்டுள்ளனர். எவ்வித பிரச்னையும் இல்லாததால், இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது தேவையற்ற சந்தை அழைப்புகளால், வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக 92 மில்லியன் பேர் புகார்கள் பதிவாகியுள்ளன. வரும் 1ம் தேதி முதல் தேவையற்ற சந்தை அழைப்பு தொல்லைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதே போல, பண்டிகை நாட்களில் எஸ்.எம்.எஸ்., மற்றும் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பது தொடர்பாகவும் அதிகளவில் புகார்கள் வந்துள்ளது.ஆண்டிற்கு ஐந்து நாட்கள் மட்டுமே தொலைபேசி நிறுவனங்கள், அவர்கள் விரும்பும் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments